For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சவீதா மரணம் எதிரொலி: அயர்லாந்தில் சட்டப்பூர்வமாக நடந்தேறியது முதல் கருக்கலைப்பு

Google Oneindia Tamil News

First abortion carried out under new legislation
டூப்ளின்: பல் டாக்டர் சபீதாவின் மரணத்தைத் தொடர்ந்து அயர்லாந்தில் கொண்டு வரப்பட்ட கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கும் சட்டத்தின் படி, முதல் கருக்கலைப்பு அதிகாரப்பூர்வமாகச் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சவிதா என்ற 31 வயதுப் பெண், அயர்லாந்து நாட்டில் பல் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். கர்ப்பமான அவருக்கு உடல் ரீதியாக உண்டான சில பிரச்னைகளால், கருவை கலைக்க, மருத்துவமனையை அணுகினார். ஆனால், அயர்லாந்து நாட்டில், கருக்கலைப்பு குற்றமாக கருதப்படும் காரணாத்தால் சவிதாவுக்கு, கருச்சிதைவு செய்ய மறுத்து விட்டது மருத்துவமனை நிர்வாகம்.

சவிதாவின், கருப்பையில் சிசுஇறந்ததால், அதன் நஞ்சு, அவர் ரத்தத்தில் கலந்து, சவிதா, ஒரு வாரத்தில் மரணமடைந்தார். கருச்கலைப்பு செய்திருந்தால் சபீதாவைக் காப்பாற்றியிருக்க முடியும் என்ற போராட்டக்காரர்களின் வாதத்தைத் தொடர்ந்து, சில நிபந்தனைகளின் அடிப்படையில், கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கும் சட்ட வடிவில், அயர்லாந்து அதிபர் கையெழுத்திட்டார்.

அதன் படி, அதிகாரப்பூர்வமாக அயர்லாந்து, டுப்ளின் தெருவில் உள்ள நேஷனல் மெடர்னிட்டி மருத்துவமனையில், முதல் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாகச் செய்யப் பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 18 வார கர்ப்பமான பெண்ணுக்கு இந்தக் கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.

அவரது கருவில் இரு குழந்தைகள் இருந்ததாகவும், அவற்றின் மூலம் அப்பெண்ணின் உயிருக்கு மருத்துவ ரீதியாக ஆபத்து என்பதால் இந்த கருக்கலைப்பு அதிகாரப்பூர்வமாகச் செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

English summary
The first termination of a pregnancy carried out under the provisions of new abortion legislation has taken place at the National Maternity Hospital on Holles Street, Dublin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X