For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.44,000 கோடி உணவுப்பொருள் வீண்… வேளாண் அமைச்சர் சரத் பவார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Rs 44,000 crore worth of food goes waste every year: Sharad Pawar
டெல்லி: உணவுப் பொருட்களை பாதுகாத்து வைக்கும் கட்டமைப்புகள் சரியில்லாத காரணத்தால் ஆண்டுதோறும் ரூ.44 ஆயிரம் கோடி மதிப்பிலான உணவுப் பொருள்கள் வீணாகின்றன என்று உணவுப் பதப்படுத்தல் துறை அமைச்சர் சரத் பவார் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பதிலளித்த அவர் கூறியதாவது:

ஆண்டுதோறும் வீணாகிப் போகும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் மதிப்பு ரூ.13,309 கோடி.

இத்துடன் அரிசி, கோதுமை, பருப்பு வகைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இதன் மதிப்பு ரூ.44 ஆயிரம் கோடி என்றார்.

தமிழில் வாதட கருத்துரு

உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் ஆங்கிலமே வழக்காடு மொழியாக தொடர்கிறது. தமிழகம், குஜராத் உயர்நீதிமன்றங்களில் அவர்களின் தாய்மொழியிலும், சத்தீஸ்கரில் இந்தியிலும் வாதாட அனுமதிக்க வேண்டி அந்த மாநிலங்கள் கருத்துரு அனுப்பியுள்ளதாக கபில் சிபல் கூறினார்.

கடந்த ஆகஸ்டு 1ஆம் தேதி நிலவரப்படி உச்ச நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள், உயர் நீதிமன்றங்களில் 275 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் தெரிவித்தார். இதனால் நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்கமடைந்துள்ளதாகக் மேலும் கூறினார்.

English summary
Due to lack of adequate storage infrastructure, fruits, grains and vegetables worth Rs 44,000 crore goes waste every year, food processing industries minister Sharad Pawar informed Rajya Sabha on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X