For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொடுங்கையூரில், வகுப்பறையில் 13 வயது மாணவி மாரடைப்பால் மரணம்

Google Oneindia Tamil News

சென்னை: கொடுங்கையூரில் பள்ளிக்குச் சென்ற 13 வயது சிறுமி வகுப்பறையிலேயே, மாரடைப்பால் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொடுங்கையூரில் வசித்து வரும் சையத் நயாஸ் என்ற டெய்லரின் 13 வயது மகள் நசிஃபா அஃசீன். இச்சிறுமி நேற்று வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற இச்சிறுமி, முதல் வரிசையில் அமர்ந்து வகுப்பில் பாடம் கவனித்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

அதனைக் கண்டு அதிர்ந்து போன வகுப்பு ஆசிரியையும், சக மாணவர்களும் உடனடியாக பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் உடனடியாக, மருத்துவமனை கொண்டு செல்லப் பட்ட நசிஃபாவை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மரணாமடைந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். திடீர் மாரடைப்பின் காரணமாக அவர் மரணாமடைந்ததாக டாக்டர்கள் செய்த சோதனையில் தெரிய வந்துள்ளது.

நஃசியாவுக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்ட உடனேயே பள்ளி நிர்வாகம் சார்பில் அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. உடனடியாக பள்ளிக்கும் பின்னர் மருத்துவமனைக்கும் விரைந்த அவர்களுக்கு நஃபிசா மரணமடைந்த தகவல் தெரிய வந்துள்ளது.

அதற்குள் சில அரசியல் கட்சிகள் இடையில் புகுந்து நஃபீசாவின் மரணத்தை அரசியலாக்கும் வகையில், பள்ளி நிர்வாகம் மீது வழக்கு தொடுக்க நிர்பந்தித்துள்ளனர். ஆனால், அதனை மறுத்து விட்ட சையத், மேலும் தன் மகளுக்கு ஏற்கனவே இதய நோய் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, நஃபீசா இதயநோய்க்கான மருத்துவம் பார்த்து வந்த ஆவணங்களையும் போலீசிடம் சமர்பித்துள்ளார் சையத். இதனால், நஃபீசா மரணத்தை வழக்காக பதிவு செய்யவில்லை போலீசார்.

English summary
A Class 8 student collapsed and died of a cardiac arrest suffered during class hours at a Kodungaiyur school on Saturday. Police, who interviewed her parents and doctors, said the cardiac arrest was caused by a congenital heart condition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X