For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராகிங்கின் அகோரம்... ஜூனியர்களுக்கு வாயில் மதுவை தாறுமாறாக ஊத்தி விட்ட சீனியர்கள்

Google Oneindia Tamil News

தர்மபுரி இடம் தர்மபுரி பேருந்து நிலையம்.. மாணவர்ள் 8 பேர் மயங்கிக் கிடந்தனர்... 108க்குத் தகவல் போனது.. அதில் வந்து மாணவர்களைப் பரிசோதித்தவர்கள் அவர்கள் அளவுக்கு அதிமாக மது அருந்தியதால் மயக்கம் என்று தெரிவித்தனர்.. மாணவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு போய் தெளிய வைத்து கேட்டபோது, கல்லூரியில் ராகிங் நடந்தது, சீனியர் மாணவர்கள் கட்டாயப்படுத்தி மதுவை ஊற்றி விட்டனர் என்றுகூற.. அத்தனை பேருக்கும் ஷாக்.

ராகிங்கின் உச்சகட்ட அகோரமாக இது கருதப்படுகிறது. இதுகுறித்து போலீஸாரும், சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகமும் விசாரணையில் இறங்கியுள்ளது.

இந்த மாணவர்கள் அனைவரும் தர்மபுரி -கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருபவர்கள் ஆவர்.

மயக்க நிலையில் 8

மயக்க நிலையில் 8

தர்மபுரி பேருந்து நிலையத்தில் பயணிகள் பலர் பஸ்சுக்காக காத்திருந்தபோது அங்கு 8 மாணவர்கள் மயங்கி நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தனர்.

விரைந்து வந்த 108

விரைந்து வந்த 108

இதையடுத்து 108 ஆம்புலன்ஸுக்கு சிலர் தகவல் கொடுக்க ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது.

நல்ல மப்பு...

நல்ல மப்பு...

விரைந்து வந்த ஆம்புலன்ஸில் இருந்தவர்கள் மாணவர்களைப் பரிசோதித்துப் பார்த்தனர். அப்போது 8 பேரும் அதிக அளவில் மது அருந்தியதால் மயங்கிக் கிடப்பதாக தெரிய வந்தது.

மருத்துவமனைக்கு...

மருத்துவமனைக்கு...

இதையடுத்து 8 பேரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

நடந்தது என்ன...

நடந்தது என்ன...

பின்னர் ஒரு மாணவருக்கு தெளிவு வந்தது. அவர் கூறுகையில், தருமபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. அந்தக் கல்லூரியில்தான் நாங்கள் படிக்கிறோம்.

அறையில் அடைத்து வைத்து

அறையில் அடைத்து வைத்து

இந்த கல்லூரியில் சீனியர் மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களான எங்களை அழைத்து ஓரு அறையில் அடைத்து, எங்களிடம் இருந்த பணத்தை மிரட்டி பெற்றுக்கொண்டனர். பின்னர் டாஸ்மாக் பாரில் மதுபானங்கள் வாங்கி வந்தனர்.

ராகிங் கொடுமை

ராகிங் கொடுமை

சனிக்கிழமை காலையில் இருந்து மாலை வரை எங்களை மது அருந்த சொல்- ரேக்கிங் செய்தனர். மாலையில் வீடு திரும்புவதற்காக எழுந்தபோது மதுபோதையில் எங்களால் எழுந்திருக்க முடியவில்லை. பின்னர் சீனியர் மாணவர்கள் எங்களை கல்லூரி பேருந்தில் ஏற்றி அனுப்பினர்.

எப்படி இங்கே வந்தோம்னே தெரியலை..

எப்படி இங்கே வந்தோம்னே தெரியலை..

நாங்கள் தருமபுரி பேருந்து நிலையத்தில் மயங்கி கிடந்தது கூட எங்களுக்கு தெரியாது. நாங்கள் எப்படி மருத்துவமனைக்கு வந்தோம் என்று தெரியவில்லை என்றார்.

விசாரணை

விசாரணை

இதுகுறித்து கல்லூரி நிர்வாகமும், போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் கலங்கிப் போயுள்ளனர்.

English summary
Eight ragges students were rescued by 108 ambulance after they were fell in the Dharmapuri bus stand in a drunken state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X