For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இடைத்தேர்தலில் ஜெயிக்கலையே.. தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் குமாரசாமி!

By Mathi
Google Oneindia Tamil News

Kumaraswamy offered to quit the JD(S) leader post
பெங்களூர்: மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கோட்டைகளை இடைத்தேர்தலில் கோட்டை விட்டதால் அக் கட்சித் தலைவர் குமாரசாமி தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் ஊரகம் மற்றும் மாண்டியா லோக்சபா தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 21-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் கடந்த சனிக்கிழமை எண்ணப்பட்டன. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கோட்டைகளாக கருதப்படும் மாண்டியா, பெங்களூர் ஊரக தொகுதிகளில் காங்கிரஸ் அதிரடியாக வெற்றி பெற்றுவிட்டது.

அதுவும் பெங்களூர் ஊரகப் பகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரான குமாரசாமியின் மனைவி அனிதா படுதோல்வி அடைந்தார். இதற்குக் காரணம் உட்கட்சி மோதல்கள்தான் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தேவ கவுடாவுக்கு குமாரசாமி கடிதம் அனுப்பியிருந்தார். இந்த ராஜினாமா கடிதத்தை ஏற்பதாகவும் தேவ கவுடா தெரிவித்திருக்கிறார்.

English summary
Kumaraswamy had offered to quit the post of the JD(S) state unit president and that of the leader of the opposition in the Assembly following the party’s debacle in byelections to the Lok Sabha from Bangalore Rural and Mandya constituencies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X