For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூபாய் மதிப்பு- 66ஐ தொட்டது!: பங்குச் சந்தைகள் தடதட... சென்செக்ஸ் 600.. நிப்டி 189 புள்ளிகள் சரிவு!

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: ரூபாய் மதிப்பு இன்று மேலும் சரிந்து ரூ 66 ஆகிவிட்டதால், இந்திய பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் 600 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையில் 189 புள்ளிகளும் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போதே சரிவு நிலை காணப்பட்டது.

காலை 9.20 மணி அளவில் 202 புள்ளிகள் சரிந்தது. ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்ததால், வீழ்ச்சி தொடர்ந்தது.

Sensex down with 600 points

பிற்பகல் 3 மணி அளவில் சென்செக்ஸ் 602 புள்ளிகள் சரிந்து, 17,956 ஆக காணப்பட்டது. அதேப்போன்று தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 190 புள்ளிகள் சரிவுடன் 5,285 ஆக காணப்பட்டது.

ஐ.டி. நிறுவனங்களின் பங்குகள் 1 சதவீதம் உயர்ந்து காணப்பட்ட நிலையில், வங்கிகள், ரியல் எஸ்டேட், உலோக நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் 2 முதல் 4 சதவீதம் சரிந்து காணப்பட்டன.

ஹெச்.டி.எப்.சி. வங்கி, மாருதி சுஸுகி, ஐடிசி, பெல், ஹிண்டல்கோ மற்றும் கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் 4 முதல் 7 சதவீதம் வரை சரிந்து காணப்பட்டன.

English summary
Indian share market faces big blow today due to the historic down in rupee value against US dollar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X