For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆற்காடு வீராசாமிக்கு இடுப்பு எலும்பு முறிவு… மருத்துவமனையில் அனுமதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Arcot Veerasamy hospitalized
சென்னை: திமுக முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி தடுமாறி விழுந்து இடுப்பு எலும்பில் அடிபட்டதை அடுத்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆற்காடு வீராசாமி சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் தினமும் காலையில் நடைபயிற்சி செல்வார். நடைபயிற்சி செல்லும் போது உதவியாளர் ஒருவர் துணைக்கு செல்வார். நேற்று முன்தினம் காலையில் உதவியாளர் இல்லாமல் தனியாக நடைபயிற்சியில் ஈடுபட்டபோது கால் தடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதில் அவருக்கு இடது பக்க இடுப்பின் கீழ் பகுதியில் பலத்த அடிபட்டது. மேலும் கையிலும் காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் உடல் நிலையை பரிசோ தித்து எலும்பு முறிவு ஏற்பட்டதை கண்டறிந்து உடனடியாக ஆபரேசன் செய்தனர். அவரது உடல் நிலை தேறிவருகிறது. இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

English summary
Senior DMK Leader Arcot N Veerasamy was admitted to the Apollo hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X