For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முலாயம்சிங்குடன் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சந்திப்பு! சஸ்பென்ட் நடவடிக்கை ரத்து?

By Mathi
Google Oneindia Tamil News

Durga
லக்னோ: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய உத்தரப்பிரதேச ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா சக்தி நக்பால், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். இதைத் தொடர்ந்து அவர் மீதான சஸ்பென்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.

ஐ.ஏ.எஸ். அதிகாரியான 28 வயது துர்கா சக்தி நக்பால், கிரேட்டர் நொய்டாவில் கெளதம் புத்தா நகரில் மசூதி ஒன்றில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுற்றுச் சுவரை இடிக்க உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து ரம்ஜான் மாதத்தில் சமூக நல்லிணகத்தை சீர்குலைக்க முயற்சித்தார் என்று கூறி அவரை மாநில அரசு ஜூலை 27-ந் தேதி சஸ்பென்ட் செய்தது.

துர்கா சக்தி சஸ்பென்ட் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் பிரதமர் தலையிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாவும் வலியுறுத்தி இருந்தார். இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை போனது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் தந்தையான சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங்கை ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சந்தித்துப் பேசியிருக்கிறார். இதைத் தொடர்ந்து துர்கா மீதான நடவடிக்கையை மறுபரீசிலனை செய்ய மாநில உள்துறை செயலர் ஸ்ரீவஸ்தா கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார். அனேகமாக துர்கா சக்தி மீதான சஸ்பென்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.

English summary
IAS officer Durga Shakti Nagpal, whose suspension by the Uttar Pradesh government last month on questionable grounds triggered nationwide outrage, met Samajwadi Party chief Mulayam Singh Yadav last week, raising the possibility that her suspension may be revoked soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X