For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருப்பு எம்.ஜி.ஆரைத் தெரியும்.. தங்கச்சிமடம் ஸ்டீவ் வாக்கைத் தெரியுமா...!

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் மீது கொண்ட அலாதி அன்பின் காரணமாக தங்களுக்கும், தங்களது பிள்ளைகளுக்கும் அவர்களது பெயர் வைப்பது சாதாரணமான விஷயம்தான். ஆனால் ராமேஸ்வரம் அருகே ஒரு கிராமத்தில் விதம் விதமான பெயர்களைக் காணலாம்.

இந்த ஊரில் மாத்யூ ஹெய்டனைப் பார்க்கலாம், ஸ்டீவ் வாகைப் பார்க்கலாம். அந்த ஊரின் பெயர் தங்கச்சி மடம். ராமேஸ்வரம் அருகே உள்ள மீனவ கிராமம்.

இங்கு கிரிக்கெட் மற்றும் மல்யுத்த ரசிகர்கள் ஏராளம். இதனால் தங்களது அபிமான வீரர்களின் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டி அழகு பார்க்கின்றனர் இந்த மீனவக் குடும்பத்தினர்.

கிரிக்கெட் கிரிக்கெட்.. மல்யுத்தம்தான்

கிரிக்கெட் கிரிக்கெட்.. மல்யுத்தம்தான்

இந்த ஊரில் உள்ளவர்கள் பெரும்பாலும் கிரிக்கெட் ரசிகர்களாக உள்ளனர். மற்றவர்கள் மல்யுத்த ரசிகர்கள்.

அது மட்டுமா...?

அது மட்டுமா...?

விளையாட்டு வீரர்கள் மீது மட்டுமல்ல, பல்வேறு தனியார் நிறுவனங்கள் மீது கொண்ட அபிமானத்தால் அவற்றின் பெயரையும் தங்களது பிள்ளைகளுக்கு வைக்கிறார்கள் இந்தக் கிராமத்தினர்.

டேய் கிர்லோஸ்கர்.. 2 இட்லி சாப்பிட்டுட்டுப் போடா...!

டேய் கிர்லோஸ்கர்.. 2 இட்லி சாப்பிட்டுட்டுப் போடா...!

இந்த ஊரைச் சேர்ந்த ஒரு சிறுவனின் பெயர் கிர்லோஸ்கர். அதாவது மீனவர்களின் படகுகளில் பொருத்தப்படும் மீன்பிடி டீசல் என்ஜின் தயாரிப்பாளரான கிர்லோஸ்கர் நிறுவனத்தின் பெயரையே பிள்ளைக்கு வைத்து விட்டனர் இவரது பெற்றோர்.

பாஸ்கரன் மகன் ஸ்டீவ் வாக்

பாஸ்கரன் மகன் ஸ்டீவ் வாக்

அதேபோல பாஸ்கரன் என்ற மீனவரின் மகன் பெயர் ஸ்டீவ் வாக். காரணம், பாஸ்கரனின் மச்சான் ஸ்டீவின் மிகப் பெரிய ரசிகராம். இதனால் மச்சானுக்குப் பிடித்த ஸ்டீவ் பெயரை மகனுக்கு வைத்து விட்டார் பாஸ்கரன்.

கேப்டன் ஸ்டீவ் வாக்.. படிப்பு 8வது..!

கேப்டன் ஸ்டீவ் வாக்.. படிப்பு 8வது..!

8வது வகுப்பு படித்து வரும் ஸ்டீவ் வாக், உள்ளூர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆவார். அத்தோடு இல்லாமல், 132 வயதுக்குட்பட்டோருக்கான கபடி அணியின் கேப்டனாகவும் கலக்குகிறான் ஸ்டீவ்.

லாஸ்ட் பால்ல சிக்ஸ் அடிச்சோம்ல...!

லாஸ்ட் பால்ல சிக்ஸ் அடிச்சோம்ல...!

தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து தங்கச்சிமடம் ஸ்டீவ் வாக் கூறுகையில், சமீபத்தில் ஒரு போட்டியில் கடைசிப் பந்தில் ஒரு சிக்ஸர் அடித்து எனது அணியை ஜெயிக்க வைத்தேன் என்றான் பெருமிதமாக.

அண்ணன் கேஸ்டோபர் என்ன சொல்றார்னா...!

அண்ணன் கேஸ்டோபர் என்ன சொல்றார்னா...!

ஸ்டீவ் வாக்கின் அண்ணன் கேஸ்டோபர் கூறுகையில், என்னோட அக்காவுக்கு கடந்த வருடம் ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு அயர்லாந்து மல்யுத்த வீரர் ஷீமஸ் பெயரை வைக்குமாறு எனது மச்சானிடம் கூறினேன். அவரும் உடனே ஏற்றுக் கொண்டார் என்றார்.

மாத்யூ ஹெய்டன் உள்ளேன் ஐயா..!

மாத்யூ ஹெய்டன் உள்ளேன் ஐயா..!

பள்ளிக்கூடத்தில் வாததியார்களுக்குத்தான் பெரும் குழப்பமாம். விதம் விதமான வித்தியாசமான பெயர்களைக் கூப்பிடுவதற்கே அவர்கள் முதலில் பழகிக் கொள்ள வேண்டியிருந்ததாம்.

ஸ்டீவ் வாக் கிளாஸ்மேட் பிக் ஷோ..!

ஸ்டீவ் வாக் கிளாஸ்மேட் பிக் ஷோ..!

பிரபலமான அமெரிக்க மல்யுத்த வீரரான பிக் ஷோவின் பெயரில் ஒருவன் ஸ்டீவ் வாக் கிளாஸில் இருக்கிறான். அவன் கூறுகையில், ஆசிரியர்களுக்கு இப்போதெல்லாம் குழப்பம் இல்லை. மாத்யூ ஹெய்டன், தி ராக், பிக் ஷோ என எங்களது பெயர்கள் அவர்களுக்குப் பழகி விட்டன என்றான்.

ஸ்டீவ் மாதிரி நான் இல்லை

ஸ்டீவ் மாதிரி நான் இல்லை

மேலும் அவன் கூறுகையில், எனக்கு கிரிக்கெட் சரிவராது. நான் மல்யுத்த விசிறி. ஸ்டீவ் வாக், மாத்யூ ஹெய்டன் போல எனக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது... என்கிறான்.

ஒரே வீட்டில் சச்சின், ஷெவாக், யுவராஜ்

ஒரே வீட்டில் சச்சின், ஷெவாக், யுவராஜ்

ஜார்ஜ் என்பவரின் 3 பிள்ளைகளுக்கும் சச்சின், ஷேவாக், யுவராஜ் என்றே பெயர் வைத்து விட்டனர்.

சச்சினுக்கு கொஞ்சம் கூட ஆசையே இல்லைங்க..!

சச்சினுக்கு கொஞ்சம் கூட ஆசையே இல்லைங்க..!

ஆனால் 12 வயதான சச்சினுக்கு கிரிக்கெட்டில் ஆர்வமே இல்லையாம்.. இதுகுறித்து ஜார்ஜ் கூறுகையில், சச்சின் என்ற பெயருக்கேற்ப அவன் நடப்பதே இல்லை. கிரிக்கெட் ஆர்வமே இல்லை. ஷேவாக், யுவராஜாவது எனது ஆசைப்படி நடப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார் கவலையுடன்...

உங்க ஊர்ல பவர் ஸ்டார் இருக்காராப்பா...???!

English summary
Cricket legends like Steve Waugh and Mathew Hayden playing cricket with wrestling stars Big Show and The Rock might seem like a wild fantasy. But for residents of Thangachimadam, a fishing hamlet near the pilgrim town of Rameswaram in Tamil Nadu, this is no figment of imagination. For, it is not the legends who play the game in this coastal hamlet, but the local heroes, who are namesakes of renowned cricketers and wrestlers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X