For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொருளாதார நெருக்கடிதான்... நாளை விளக்கம் அளிக்கிறேன்: பிரதமர் மன்மோகன்சிங்!

By Mathi
Google Oneindia Tamil News

Manmohan singh
டெல்லி: நாடு இப்போது பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதை தாம் மறுக்கவில்லை என்றும் இது குறித்து நாளை நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறேன் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று பொருளாதார நிலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. அருண் ஜேட்லி கோரிக்கை வைத்தார்.

இதைத் தொடர்ந்து ரூபாயின் மதிப்பு சரிவடைவது குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் தேவை என்றும் பொருளாதார நிலை குறித்து நாளை சபையில் விளக்கம் அளிப்பதாகவும் பிரதமர் கூறினார்.

மேலும், இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதை தாம் மறுக்கவில்லை. உள்நாட்டு விவகாரங்களும், சர்வதேச சூழ்நிலைகளும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதற்குக் காரணமாக உள்ளன என்றும் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

English summary
With falling rupee and rising oil prices casting a shadow over Indian economy, Prime Minister Manmohan Singh on Thursday said the country is faced with a difficult economic situation for which some domestic factors too were responsible.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X