For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்எஸ்எல்சி தேர்வு ரத்து இல்லை.. வழக்கம் போல நடக்கும்! - கல்வித் துறை

By Shankar
Google Oneindia Tamil News

No change in SSLC exam pattern
சென்னை: பத்தாம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்படும் என கடந்த சில மாதங்களாக நிலவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது தமிழக அரசு. இந்தத் தேர்வு வழக்கம் போல நடக்கும் என அறிவித்துள்ளது.

தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாம் வகுப்புத் தேர்வை மாணவர்கள் இனி எழுதத் தேவையில்லை என்றும், வெறும் பருவ முறைத் தேர்வு மட்டுமே நடக்கும் என்றும், ப்ளஸ் டூ மட்டுமே அரசுத் தேர்வு எழுதலாம் என்றும் ஒரு பேச்சு நிலவி வந்தது.

ஆசிரியர்களே கூட இப்படி மாணவர்கள் மத்தியில் பேசி வந்தனர். மாநில கல்வி வாரியம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 2014-2015-ம் ஆண்டு ரத்து செய்துவிடும் என்று மாணவர்களும் பேச ஆரம்பித்துவிட்டனர்.

இப்போது இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது கல்வித் துறை.

இதுகுறித்தப பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வைகைசெல்வன், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா, அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் ஆகியோர் கூறியதாவது:

"எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் எந்த வித மாற்றமும் இல்லை. இரு தேர்வுகளும் வழக்கம்போல நடைபெறும். யாரும் வதந்தியை நம்பவேண்டாம். பிளஸ்-2 தேர்வு முதலில் நடைபெறும். பின்னர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறும்," என்றனர்.

English summary
Govt of Tamil Nadu announced that the SSLC exams will conduct as usual in April.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X