For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிராமங்களில் 5 மணி நேரம்.. நகரங்களில் 3... மீண்டும் மின்வெட்டு அமல்?

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: காற்றாலை மின் உற்பத்தி வெகுவாக குறைந்து போய் விட்டதால் மறுபடியும் மின்வெட்டை அமல்படுத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இருப்பினும் இதுதொடர்பாக அரசுத் தரப்பிலிருந்தோ அல்லது மின்வாரியத் தரப்பிலிருந்தோ எந்தத் தகவலும அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

அதேசமயம் கிராமப்புறங்களில் 5 மணி நேரமும், நகர்ப் பகுதிகளில் 3 மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறைந்து போன காற்றாலை மின்சாரம்

குறைந்து போன காற்றாலை மின்சாரம்

பல்வேறு காரணிகளால் காற்றாலை மின் உற்பத்தி வெகுவாக குறைந்து போய் விட்டது.

பெரும் மின்பற்றாக்குறை

பெரும் மின்பற்றாக்குறை

தமிழகத்திற்கு தினசரி 13,000 மெகாவாட் மின்சாரம் வரை தேவைப்படுகிறது. ஆனால் கிடைப்பதோ, வெறும் 9,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே.

தென் மேற்குப் பருவக் காற்றால்

தென் மேற்குப் பருவக் காற்றால்

கடந்த சில மாதங்களாக தென் மேற்குப் பருவக் காற்று சிறப்பாக வீசியதால் காற்றாலை மின் உற்பத்தி அமோகமாக இருந்தது. இதனால் மின் தடை அகன்றது. மக்களும் வியர்வைக் குளியலிலிருந்து தப்பி நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

உற்பத்தி சரிவு

உற்பத்தி சரிவு

ஆனால் தற்போது காற்று குறைந்து விட்டது. மின் உற்பத்தியும் குறைந்து விட்டது. இதனால் மீண்டும் மின் தடை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது.

கிராமங்களில் 5 மணி நேரம் மின்வெட்டு

கிராமங்களில் 5 மணி நேரம் மின்வெட்டு

கிராமப் பகுதிகளில் 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

நகரங்களில் 3 மணி நேரம்

நகரங்களில் 3 மணி நேரம்

நகர்ப்புறங்களைப் பொருத்தவரை 3 மணி நேரம் வரை மின்தடை அமலாவதாக கூறப்படுகிறது.

சென்னைக்கு இதுவரை இல்லை

சென்னைக்கு இதுவரை இல்லை

அதேசமயம், தலைநகர் சென்னையில் இதுவரை மின்வெட்டு அமலாகவில்லை. சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் அதிகரிக்கும் அபாயம்

மேலும் அதிகரிக்கும் அபாயம்

அதேசமயம் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் அபாயமும் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இதுவரை அரசுத் தரப்பிலோ, மின்வாரியத் தரப்பிலோ எந்த தகவலும் இல்லை.

English summary
Power cut has returned to Tamil Nadu after a brief lull due to the shortage of wind power.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X