For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்.. சீனி, பிசிசிஐக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Google Oneindia Tamil News

Another blow! Supreme Court issues notice to BCCI, N Srinivasan
டெல்லி: ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக புதிய கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து பாம்பே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியம், அதன் தலைவர் என்.சீனிவாசன், சீனிவாசனின் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் தொடர்பாகவும், அதில் தொடர்புள்ளவர்கள் குறித்தும் விசாரிக்க சீனிவாசன் நியமித்த விசாரணைக் கமிட்டி செல்லாது, அது சட்டவிரோதமானது என்று பாம்பே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.

சீனிவாசன் அமைத்த கமிட்டியானது, தனது விசாரணை அறிக்கையை ஜூலை 28ம் தேதி அளித்தது. அதில் சீனிவாசன் நல்லவர், அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் ரொம்ப ரொம்ப நல்லவர், தப்பே செய்யாதவர், அதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் ராஜ் குந்த்ரா சொக்கத் தங்கமானவர், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்திற்கும் ஸ்பாட் பிக்சிங்குக்கும் தொடர்பே இல்லை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இந்த ஊழலுக்கும் தொடர்பில்லை என்று சகட்டுமேனிக்கு நடத்தைச் சான்றிதழை வழங்கி பைலைக் குளோஸ் செய்திருந்தது.

இதை எதிர்த்து பீகார் மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. அதில் புதிய கமிட்டி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதை பாம்பே உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிர்த்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்திருந்தனர். அதை விசாரித்த உச்சநீதிமன்றம் தற்போது நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

English summary
Supreme Court has ordered to issue notices to BCCI, N Srinivasan, India Cements on a plea against Bombay High Court verdict refusing to appoint a fresh committee to probe IPL spot fixing scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X