For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருத்துவமனையில் ஜெகனுக்கு வலுக்கட்டாயமாக உணவு... உண்ணாவிரதம் முறியடிப்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மருத்துவமனையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட நிலையில் அவருக்கு வலுக்கட்டாயமாக மருத்துவர்கள் உணவு செலுத்தி போராட்டத்தை முறியடித்தனர்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். அங்கு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் உஸ்மானியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

Jagan shifted to NIMS as health worsens

ஆனால் உஸ்மானியா மருத்துவமனையிலும் அவர் உண்ணாவிரதத்தைத் தொடரவே உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் அங்கிருந்து நேற்று நிம்ஸ் மருத்துவமனைக்கு ஜெகன் மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் நிம்ஸ் மருத்துவமனை முன்பு திரண்டனர். ஆனால் யாரையும் பார்க்க நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

Jagan shifted to NIMS as health worsens

பின்னர் இன்று நீதிமன்றம் ஜெகனின் மனைவி பார்வதி மட்டும் மருத்துவமனையில் துணைக்கு இருக்க அனுமதி அளித்திருந்தது. இதனிடையே சிறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் ஜெகனுக்கு மருத்துவர்கள் குழுவினர் வலுக்கட்டாயமாக உணவு செலுத்தி அவரது போராட்டத்தை முறியடித்தனர்.

ஜெகனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாலேயே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடர் உண்ணாவிரதம்! ஜெகன் வேறு மருத்துவமனைக்கு மாற்றம்- பதற்றம்!

இதனிடையே ஜெகனுடன் மருத்துவமனையில் அவரது மனைவி தங்கி இருந்து உதவி செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

English summary
In a late night development, YSR Congress president YS Jaganmohan Reddy, who has been on fast since Sunday, was shifted to the Nizam Institute of Medical Sciences (NIMS) at Punjagutta here on Friday amid tight security as as his condition deteriorated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X