For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நவநீதம் பிள்ளையின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை!

By Shankar
Google Oneindia Tamil News

கொழும்பு: ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை விடுத்த கோரிக்கைகளை, இலங்கை அரசு நிராகரித்துள்ளதg.

தேசிய பாதுகாப்புக்கு எதிராக அந்தக் கோரிக்கைகள் இருப்பதாகக் கூறி நிராகரிக்கப்பட்டதாக சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Navaneetham Pillai

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்தல், வடக்கில் ராணுவத்தை வெளியேற்றுதல், 800 புலி உறுப்பினர்களை விடுதலை செய்தல் மற்றும் போலீஸ் படையை நீதி அமைச்சகத்திடம் ஒப்படைத்தல் போன்ற கோரிக்கைகளை நவநீதம் பிள்ளை இலங்கை அரசுக்கு விடுத்துள்ளார்.

அவரது இந்த அனைத்து கோரிக்கைகளும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

எனவே இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

சில தனியார் அமைப்புகளின் பேச்சைக் கேட்டுத்தான் நவநீதம் பிள்ளை இப்படி கோரிக்கை விடுத்திருப்பதாகவும் இலங்கை கருதுவதாக அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

English summary
Sri Lanka has rejected Navaneetham Pillai's demands for Tamils welfare.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X