For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காற்றாலை மின் உற்பத்தி கடும் சரிவு.. மின்வெட்டு அதிகரிப்பு.. தொழில்கள் பாதிப்பு

Google Oneindia Tamil News

நெல்லை: காற்றாலை மின் உற்பத்தி கடுமையான சரிவைச் சந்தித்துள்ளதால் மின்வெட்டு நேரமும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் பாதிப்பை சந்திக்க ஆரம்பித்துள்ளன. மக்களும் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக காற்றாலை மின் உற்பத்தி அடியோடு சரிந்ததால் மக்களின் இயல்வு வாழ்க்கையும், தொழிற்சாலையின் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தீபாவளி ஜவுளி, பட்டாசு உற்பத்திகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Power cut hits various industries as wind power comes down

தமிழகத்தில் அன்றாட மின் தேவையை விட உற்பத்தி சுமார் 2 ஆயிரம் மெகா வாட்டுக்கும் மேல் குறைவாக உள்ளது. அவ்வப்போது காற்றாலை மூலம் கிடைத்து வந்த மின்சாரத்தை கொண்டு பற்றாக்கு்றையை சாமாளி்க்கிறது.

கடந்த மூன்று மாதங்களாக தென்மேற்கு பருவகாற்று மூலம் நெல்லை, ஈரோடு மண்டலங்களில் நாள்தோறும் 2 ஆயிரம் மெகாவாட்டுக்கு குறையாமல் மின்சாரம் கிடைத்து வந்தது. ஆனால் கடந்த ஒரூ வாரமாக இந்த நிலை தலைகீழாக மாறி வி்ட்டது.

கடந்த மூன்று தினங்களாக காற்றாலை மூலம் கிடைத்து வந்த சுமார் 70 முதல் 150 மெகாவாட்டாகவும், அதிகபட்சம் 500 மெகா வாட் அளவிலும் உள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறை மற்றும் பகலில் சுடும் கடும் வெயில் காரணமாக ஏசி முன் நுகர்வு அதிகரிப்பால் கடும் மின்தடை ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் காற்றாலை மின் உற்பத்தி 90 சதவீதம் முடங்கி விட்டது. குறிப்பாக அதிகாலை நேரங்களில் காற்றாலைகள் முழுவதும் சுற்றாமல் காட்சி கம்பமாக மாறி நிற்கிறது.

English summary
Power cut has started to hit various industries as wind power comes down drastically in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X