For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வோடபோன் நிறுவனத்தின் பங்குகளை ரூ. 6.8 லட்சம் கோடிக்கு வாங்கும் வெரிசோன்!

By Chakra
Google Oneindia Tamil News

Verizon poised for historic $130 billion Vodafone deal
நியூயார்க்: இங்கிலாந்தின் வோடபோன் நிறுவனத்திடம் உள்ள தனது பங்குகளை அமெரிக்காவின் வெரிசோன் நிறுவனம் 130 பில்லியன் டாலர்களுக்கு (சுமார் ரூ. 6.8 லட்சம் கோடி) வாங்கவுள்ளது.

இந்த இரு நிறுவனங்களும் இணைந்து வெரிசோன் வயர்லெஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றன. இப்போது இந்த நிறுவனத்தில் வோடபோனுக்கு சொந்தமான 45 சதவீத பங்குகளை வெரிசோன் வாங்கவுள்ளது. இதற்காக வோடபோனுக்கு வெரிசோன் 130 பில்லியன் டாலர்களை வழங்கவுள்ளது.

இதில் 70 பில்லியன் டாலர்களை பணமாகவும், 60 பில்லியன் டாலருக்கு இணையான பங்குகளையும் வோடபோனுக்கு வெரிசோன் வழங்கவுள்ளது.

இதற்காகத் தேவைப்படும் நிதியை வெரிசோன் நிறுவனத்துக்கு ஜே.பி. மோர்கன் சேஸ், மோர்கன் ஸ்டான்லி, பார்க்லேஸ் வங்கி, அமெரிக்கா மெரில் லின்ஜ் ஆகிய வங்கிகள் தரவுள்ளன.

20 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட வோடபோன் இப்போது இந்தியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா உள்பட 30 நாடுகளில் செல்போன் சேவையை நடத்தி வருகிறது.

வெரிசோன், வோடபோன் ஆகிய இரு நிறுவனங்களுமே நீண்ட காலமாகவே மோதலில் இருந்து வந்தன. ஒரு நிறுவனத்தை இன்னொன்று வாங்க முயன்று வந்தன. இப்போது இதில் வெரிசோன் வெற்றி பெற்றுள்ளது.

English summary
Verizon Communications was poised on Monday to finally take full control of its U.S. wireless business with a $130 billion deal that would buy out Vodafone and bring an end to a decade-long corporate standoff. The British firm said late on Sunday it was in advanced talks with Verizon to sell its 45 percent stake in the Verizon Wireless joint venture for cash and common shares in what would be the world's third-largest deal of all time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X