For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கல்வி சுற்றுலா: ஸ்கர்ட்ஸ், ஷார்ட்ஸுக்கு தடா போட்ட டெல்லி பல்கலைக்கழகம்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: கல்வி சுற்றுலா செல்லும் டெல்லி பல்கலைக்கழக மாணவ-மாணவியர் இந்தந்த ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி பல்கலைக்கழக மாணவ, மாணவியர் கல்வி சுற்றுலாவாக இன்று பஞ்சாப் கிளம்புகின்றனர். அவர்கள் ஞானோதயா எக்ஸ்பிரஸ் மூலம் பஞ்சாபுக்கு கிளம்புகிறார்கள். இந்த ரயில் அவர்களின் கல்வி சுற்றுலாவுக்கு என்று பிரத்யேகமாக விடப்பட்டுள்ளது.

முன்னதாக மாணவ-மாணவியர் இந்த சுற்றுலாவின்போது எந்தெந்த உடைகளை அணியக் கூடாது என்று பல்கலைக்கழகம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஒரு வாரம்

ஒரு வாரம்

டெல்லி பல்கலைக்கழக மாணவ, மாணவியர் 900 பேர் ஒரு வார கால சுற்றுலாவாக கிளம்புகிறார்கள். அவர்கள் பஞ்சாபில் அமிர்தசரஸ், லூதியானா, ஜலந்தர் ஆகிய இடங்களுக்கும், ஹரியானாவில் குருஷேத்ராவுக்கும் செல்கின்றனர்.

குட்டைப் பாவாடை

குட்டைப் பாவாடை

மாணவிகள் ஸ்கர்ட்டுகள், குட்டைப் பாவாடை, ஷார்ட்ஸ், ஸ்பெகட்டி ஆகியவை அணியவே கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

டி சர்ட்

டி சர்ட்

மாணவர்கள் ஸ்லீவ்லெஸ் டி சர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணியக் கூடாது என்று பல்கலைக்கழகம் கன்டிஷனாக தெரிவித்துள்ளது.

பாதுகாப்புக்காக

பாதுகாப்புக்காக

மாணவிகளின் பாதுகாப்பு கருதி தான் சில ஆடைகளுக்கு தடை விதித்துள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆனால் அனைவரும் பார்க்கும் வகையில் அனைத்து மாணவ, மாணவியரின் செல்போன் எண்களை தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. ஆனால் அதை ஒரு செய்தித்தாள் பார்த்து கூறிய பிறகு நீக்கிவிட்டது.

English summary
Delhi university students who are going to Punjab as part of their study trip via train have been given a long list of dos and don'ts. University has included shorts, skirts and sphagettis in the don'ts list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X