For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நோக்கியா செல்போன் நிறுவனத்தை ரூ. 43,000 கோடிக்கு வாங்கும் மைக்ரோசாப்ட்!

By Chakra
Google Oneindia Tamil News

Microsoft to buy Nokia's device business for $7.2 billion
ஹெல்சிங்கி (பின்லாந்து): உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை மைக்ரோசாப்ட் நிறுவனம் ரூ. 43,000 கோடிக்கு வாங்கவுள்ளது.

செல்போன் விற்பனையில் உலகில் முதலிடத்தில் இருந்த நோக்கியாவை சாம்சங் போன்ற நிறுவனங்கள் பின் தள்ளிவிட்டன.

மிக வேகமாக மாறிவரும் தொழில்நுட்பத்துக்கு இணையாக நோக்கியா தன்னை மாற்றிக் கொள்ளாததால் சாம்சங், சோனி, ஆப்பிள் போன்ற சர்வதேச நிறுவனங்களும், மைக்ரோமேக்ஸ் போன்ற உள்நாட்டு நிறுவனங்களும் நோக்கியாவின் சந்தையை ஆக்கிரமித்துவிட்டன.

குறிப்பாக ஸ்மார்ட்போன் சந்தையில் நோக்கியா மிகவும் பின்தங்கிவிட்டது. ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களை சமாளிக்க 2011ம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோ போன் சாப்ட்வேரை நோக்கியா தனது செல்போன்களில் புகுத்தியது. இது ஓரளவுக்கு நோக்கியாவுக்கு உதவினாலும், பெரிய அளவில் விற்பனையை அதிகரிக்க இந்தத் திட்டம் உதவவில்லை.

இந் நிலையில் கடும் நெருக்கடியில் உள்ள நோக்கியாவை வாங்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது.

ஆப்பிள் போன்ற சாப்ட்வேர் பின்னணியைக் கொண்ட நிறுவனங்களே நேரடியாக போன்களைத் தயாரித்து வெற்றி கண்டதையடுத்து, அதே வேலையில் கூகுள் நிறுவனமும் இறங்கியுள்ளது. விரைவிலேயே கூகுள் போன்கள் உலகளவில் வலம் வரவுள்ளன.

இந் நிலையில் அதே ரூட்டில் பயணிக்க முடிவு செய்துள்ள மைக்ரோசாப்ட் இதன் முதல் படியாக உலகின் மாபெரும் செல்போன் நிறுவனமான நோக்கியாவை வாங்க முடிவு செய்துள்ளது.

மேலும் நோக்கியா நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனரான ஸ்டீபன் எலோப் மீண்டும் மைக்ரோசாப்டிலேயே இணைவார் என்றும் தெரிகிறது. இவர் மைக்ரோசாப்டில் இருந்து தான் நோக்கியாவுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட்டின் இப்போதைய தலைவரான பால்மர் விரைவில் பதவி விலக உள்ள நிலையில், ஸ்டீபன் எலோப் மைக்ரோசாப்ட்டின் தலைவாரகவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

English summary
Microsoft Corp on Tuesday announced that it would buy Nokia's mobile phone business for 5.44 billion euros, There is also news that Nokia's CEO, Stephen Elop, would join Microsoft when the transaction closed. Reuters reported that the deal is expected to close in the first quarter of 2014 and is subject to approval by Nokia's shareholders and regulatory approvals. Nokia partnered in 2011 with Microsoft and uses Microsoft's Windows software to run its mobile phones. Nokia was struggling to respond to the challenge from other mobile companies "It's a bold step into the future - a win-win for employees, shareholders and consumers of both companies," Microsoft's outgoing CEO, Steve Ballmer, said in a statement. Finland's Nokia, once the undisputed leader in mobile phones, has been struggling to respond to the challenge from smartphone makers such as Apple and Samsung.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X