For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரையில் ‘மிஷன் ரேபிஸ்’: நேற்று மட்டும் 762 தெருநாய்களுக்கு தடுப்பூசி- இலக்கு 8000 நாய்கள்

Google Oneindia Tamil News

Dog Vaccination
மதுரை: மதுரையில், அதிகாலையிலேயே தங்கள் ‘நாய் பிடிக்கும் பணி'யைச் செவ்வணே துவக்கி விட்டார்கள் மிஷன் ரேபிஸ் ஊழியர்கள். முதல்நாளான நேற்று மட்டும் கிட்டத்தட்ட 762 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

உலக கால்நடைச் சேவை(டபிள்யூ வி எஸ்)யுடன் இணைந்து மதுரை மாநகராட்சி சார்பில் முதல்கட்டமாக 8 வார்டுகளில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது இந்தத் திட்டம். இதன் படி தெருவில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் குடும்பக்கட்டுப்பாடு செய்து விடப்படுகிறது.

முதல்நாளான நேற்று மட்டும் சுமார் 762 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இம்மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ள ரேபிஸ் தடுப்பூசி பிரச்சாரத்தில் மதுரையில் மட்டும் சுமார் 100 வார்டுகளில் பிரச்சாரம் செய்ய இந்தக்குழு திட்டமிட்டுள்ளது.

‘மிஷன் ரேபிஸ்' குறித்து டபிள்யூ. வி.எஸ்ஸைச் சேர்ந்த மூத்த கால்நடை ஒருங்கிணைப்பாளரான மருத்துவர் அப்புப்பிள்ளை முருகன் கூறுகையில், ‘இம்முயற்சி ஒரு முன்னோட்ட அடிப்படையிலேயே செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் சில குறிப்பிட இடங்களில் மட்டுமே நாங்கள் தேர்வு செய்து பணி புரிந்து வருகிறோம். அதன் படி தற்போது தமிழகத்தில் மதுரையைக் களமாகத் தேர்ந்தெடுத்துள்ளோம். மக்களிடம் இம்முயற்சிக்கு நல்ல ஆதரவு இருப்பது கண் கூடாகத் தெரிகிறது' எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சாரத்தின் மூலம் மதுரையில் மட்டும் கிட்டத்தட்ட 8000 தெரு மற்றும் வீட்டு நாய்களுக்கு தடுப்பூசி போடுவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு போடப்படும் ஊசிகளால் நாய்களுக்கு வலியோ அல்லது வேறு எந்தப்பிரச்சினைகளோ வருவதில்லை. அடையாளத்திற்காக தடுப்பூசி போடப்பட்ட நாய்களூக்கு கழுத்தில் பச்சை நிறத்தில் அட்டை தொங்கவிடப் பட்டது..

The mass campaign was launched in eight wards in Madurai Corporation with the support of UK-based World Veterinary Service (WVS), which has deployed its experts for monitoring the project. The field staff were jubilant as they could administer free anti-rabies vaccination to 762 dogs on the first day of the campaign, which will continue till September 13, covering all the 100 wards.

English summary
The mass campaign was launched in eight wards in Madurai Corporation with the support of UK-based World Veterinary Service (WVS), which has deployed its experts for monitoring the project. The field staff were jubilant as they could administer free anti-rabies vaccination to 762 dogs on the first day of the campaign, which will continue till September 13, covering all the 100 wards.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X