For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

‘இளம் எம்.பி’ ரம்யா காய்ச்சல் காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதி

Google Oneindia Tamil News

Ramya Hospitalised In Delhi Following High Fever
டெல்லி: சமீபத்தில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்று வந்த நடிகை ரம்யா காய்ச்சல் காரணமாக டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகை ரம்யா, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்று வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்த ரம்யா, சிகிச்சைக்காக டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், காய்ச்சலுக்குக் காரணம் நோய்த்தொற்றாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது ஓய்வில்லாமல் உழைத்ததே காய்ச்சலுக்குக் காரணமாம். விரைவில் குணமடைந்து, வரும் 7ஆம் தேதி முதல் தனது தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும், தொகுதி பணிகளை கவனிக்கவும் ரம்யா புறப்படுவார் என அவரது செய்தி தொடர்பாளர் டிவிட்டர் இணையதளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ரம்யாவின் கால்ஷீட்டுக்காக அவர் நடித்து நிலுவையில் உள்ள நீர் டோஸ், தில் கா ராஜா, ஆர்யன் ஆகிய படங்களும் காத்துக் கிடக்கிறதாம்.பூரண குணமடைந்த பிறகு அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறாது.

English summary
Kannada actress Ramya was admitted to a hospital in Delhi following high fever on Tuesday evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X