For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்கான் நாடாளுமன்றத்தில் ஹிந்து, சீக்கியர் பிரதிநிதித்துவத்துக்கு சிறப்பு ஒதுக்கீடு!

By Mathi
Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தானில் வாழும் ஹிந்துக்கள், சீக்கியர்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையில் சிறப்பு பிரதிநிதித்தும் வழங்க வகை செய்யும் சட்டத்தை பிறப்பித்து அதிபர் ஹமீத் கர்சாய் உத்தரவிட்டிருக்கிறார்.

ஆப்கானிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கீழவையான Wolesi Jirgaவில் மொத்தம் 249 எம்.பிக்கள் உள்ளனர். Meshrano Jirga எனப்படும் மேல்சபையில் 102 எம்.பிக்கள் உள்ளனர். தற்போது ஆப்கானிஸ்தானில் வாழும் ஹிந்து மற்றும் சீக்கியர்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளதால் கீழவையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 250ஆக அதிகரித்துள்ளது.

Afgan National Assembly

ஹிந்து மற்றும் சீக்கியர்களுக்கு சிறப்பு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையிலான சட்ட திருத்தத்துக்கு அந்நாட்டு எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தற்போது அந்நாட்டு நாடாளுமன்றமும் நடைபெறவில்லை. இதனால் ஆப்கானிஸ்தான் அரசியல் சாசனப்படி அதிபர் கர்சாய் இந்த சிறப்பு ஒதுக்கீட்டுக்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.

English summary
Afghan President Hamid Karzai on Wednesday issued a historic legislative decree reserving a special seat for Sikh and Hindu Afghan nationals in the lower house of the country's Parliament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X