For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

103 வயது தாத்தாவுக்கு ‘இடுப்பு எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சை’: ஆந்திர மருத்துவர்கள் சாதனை

Google Oneindia Tamil News

103-year-old man gets hip replaced
ஹைதராபாத்: தெருநாய் துரத்தியதில் கீழே விழுந்ததில் காயம்பட்ட 103 வயது தாத்தாவிற்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்து புதிய சாதனை படைத்துள்ளனர் ஆந்திர மருத்துவர்கள்.

1910ம் ஆண்டு சஹீராபாத்தில் பிறந்தவர் மணிக்யம். தற்போது 103 வயதாகும் இவர், கடேஸ்கர் என்ற இடத்தில் தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார். மணிக்யமிற்கு 9 பிள்ளைகளும், 57 பேரப்பிள்ளைகளும், 20 கொள்ளுப் பேரக் குழந்தைகளும் உள்ளனர்..

கடந்த சில வாரக்களுக்கு முன்னர், மணிக்யம் தெருவில் சென்று கொண்டிருந்த போது நாய் ஒன்று துரத்தியதில் கீழே விழுந்து இடுப்பில் அடி பட்டது. அவரைப் பரிசோதித்த செகந்தராபாத்தில் உள்ள அபோல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் அவரது இடது பக்க இடுப்பெலும்பு மூட்டு உடைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

103 வயதான அவருக்கு மயக்க மருந்து கொடுப்பதே மிகவும் சவாலான காரியமாக இருந்தபோதும், கட்டாயம் அறுவைச் சிகிச்சை செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது அவரது உடல்நிலை. மணிக்யத்தின் உயிரை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்தில் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, டாக்டர் மிதின் அசியுடன் இணைந்த மருத்துவர் குழு ஒன்று, அவருக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளது.

அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மணிக்யத்திற்கு லேசான ரத்த அழுத்தம், கண்பார்வைக் கோளாறு தவிர உடல் கோளாறு எதுவும் இல்லை என்று தெரிவித்த மருத்துவர்கள் அவர் விரைவில் பூரண குணமடைவார் என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

English summary
When 103-year-old MB Manikyam dislocated his left hip joint after a fall while shooing away a dog at his son's house at Ghatkesar three weeks ago, his family lost all hope of his survival. In excruciating pain, Manikyam was rushed to a hospital where he was found to have fractured his hip. However, Manikyam has probably become the first centenarian to undergo a hip replacement surgery in Andhra Pradesh, doctors said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X