For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நம் அரசியல் தலைவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் 8 ஆசிரியர்கள்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: ஆசிரியர் தினமான இன்று நம் நாட்டு அரசியல் தலைவர்களுக்கு தேவைப்படும் 8 ஆசிரியர்களைப் பற்றி பார்ப்போம்.

ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நல்ல நாளில் நம் நாட்டு அரசியல் தலைவர்களுக்கு தேவைப்படும் 8 பாட ஆசிரியர்களைப் பார்க்கலாம்.

துணிச்சல்

துணிச்சல்

பிரதமர் மன்மோகன் சிங் எந்த ஒரு விஷயத்திலும் ஒரு நிலையை எடுக்க சிரமப்படுகிறார். அதனால் அவர் துணிச்சல் என்ற ஆசிரியர் வேண்டும்.

பொருளாதாரம்

பொருளாதாரம்

வறுமை என்பது ஒரு மனநிலை என்று கூறிய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உடனே பள்ளிக்கு சென்று பொருளாதாரப் பாடத்தை கற்க வேண்டும். அவரது உடனடி தேவை பொருளாதார ஆசிரியர்.

விவேகம்

விவேகம்

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் பத்திரிக்கையாளர்களை சந்தித்தாலே அக்கட்சிக்கு திக் திக் என்று இருக்கிறது. மனிதர் என்ன உளறப் போகிறாரோ என்று அஞ்சுகிறார்கள். அவருக்கு விவேகத்தை ஒரு ஆசிரியர் கற்றுத் தர வேண்டும்.

பற்றின்மை

பற்றின்மை

இந்த வயதிலும் பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் பாஜக மூத்த தலைவர் அத்வானி பற்றின்மை குறித்து ஒரு ஆசிரியரிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

யதார்த்தம்

யதார்த்தம்

இந்தியாவில் ஒருவர் ரூ.12க்கு வயிறார சாப்பிட முடியாது என்பதை காங்கிரஸ்காரர் ராஜ் பாபருக்கு ஒரு ஆசிரியர் புரிய வைக்க வேண்டும்.

வரலாறு

வரலாறு

கம்ப்யூட்டர்களால் தான் வேலை வாய்ப்பின்மை ஏற்படுகிறது என்று கூறிய சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் வரலாற்று ஆசிரியரிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

English summary
Above is the list of 8 subject teachers our political leaders need right now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X