For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்சபா தேர்தலில் மாற்று அணி உருவாக்க முயற்சி : தா. பாண்டியன்!

By Mathi
Google Oneindia Tamil News

Left, regional parties to form Alternative front : CPI
விருதுநகர்: லோக்சபா தேர்தலில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட மாநில கட்சிகளின் ஆதரவுடன் மாற்று அணியை உருவாக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி செய்யும் என்று அக்கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய தா. பாண்டியன். சிரியாவில் ரசாயன குண்டுகள் வீசப்பட்டுள்ளதா என்று ஐ.நா. அமைத்துள்ள குழு ஆராய்ந்து வருகிறது. அக்குழுவின் அறிக்கை கிடைக்கும் முன்பே போர் தொடுக்க அமெரிக்கா ஆயத்தமாகிறது. இதன் மூலம் போர் பதற்றத்தை ஏற்படுத்தி பெட்ரோல் மற்றும் எரிவாயு விலையை உயர்த்தி, லாபம் அடைய முயற்சிக்கிறது அமெரிக்கா.

சிரியா மீது போர் தொடுக்கக்கூடாது என அமெரிக்காவுக்கு இந்தியா அறிவுறுத்த வேண்டும். 2008-ஒப்பந்தத்தின் படியே ஈரானில் இருந்து பெட்ரோல், எரிவாயுவை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாகவே கனிம வளங்கள் திருடப்பட்டுள்ளன. இதை மத்திய- மாநில அரசுகள் கண்டுகொள்ளாமலே இருந்துள்ளன. ஆனால், அவை இப்போது வெளிவரத்தொடங்கியுள்ளன. இதற்கு காரணமான அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருகிற லோக்சபா தேர்தலில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட மாநில கட்சிகளின் ஆதரவுடன் மாற்று அணியை உருவாக்க இந்திய கம்யூனிஸ்ட் முயற்சி செய்யும் என்றார்.

அப்ப 'உங்க' அதிமுக?

English summary
CPI State Secretary Tha. Pandiyan said they will try to form an alternative front of Left and regional parties for Lok Sabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X