For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரிட்டிஷ் எம்.பிக்களும் நாடாளுமன்றத்திலேயே 'பிட்டு'ப் படம் பார்க்கிறார்களாம்!

Google Oneindia Tamil News

லண்டன்: கர்நாடக சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏக்கள் முன்பு ஆபாசப் படம் பார்த்து பிடிபட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். ஆனால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள கம்ப்யூட்டர்களில் அந்த நாட்டு எம்.பிக்கள் ஆபாசப் படம் பார்த்ததாக அங்கு தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எம்.பிக்கள் மட்டுமல்லாமல் அவர்களது உதவியாளர்கள் உள்ளிட்டோரும் கூட ஆபாசப் படம் பார்த்து மகிழ்கின்றனராம்.

கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 3 லட்சம் ஆபாச இணையதளங்களை அவர்கள் பார்த்து குஜாலாகியுள்ளதாக பத்திரிக்கைச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

ஒரு நாளைக்கு 820 சைட்

ஒரு நாளைக்கு 820 சைட்

சராசரியாக ஒரு நாளைக்கு 820 ஆபாச இணையதளங்களை இவர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

போர்னோகிராபியேதான் வேணுமாம்

போர்னோகிராபியேதான் வேணுமாம்

இதில் பலர் போர்னோகிராபி என்று வகைப்படுத்தப்பட்ட இணையதளங்களை மட்டுமே தேடிப் போய் பார்த்து ரசித்துள்ளனர்.

வேணும்னு பார்க்கலையாம்

வேணும்னு பார்க்கலையாம்

அதேசமயம், இவர்கள் வேண்டும் என்று இவற்றைப் பார்க்கவில்லையாம். மாறாக ஏதாவது இணையதளத்தைத் திறக்கும்போது வரும் பாப் அப் சைட்களைத்தான் போய்ப் பார்த்தார்கள் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஒரு வருடத்துக் கதை

ஒரு வருடத்துக் கதை

2012 முதல் 2013 வரையில் இந்த ஆபாச இணையதளங்கள் பார்க்கப்பட்டுள்ளனவாம். எம்.பிக்கள், அவர்களது உதவியாளர்கள்தான் பார்த்துள்ளனராம். அமைச்சர்கள் யாரும் பார்த்ததாக தகவல் இல்லை.

ஆபாசத்துக்காக நிறைய நேரம்

ஆபாசத்துக்காக நிறைய நேரம்

இதிலிருந்து ஆபாசத் தளங்களைப் பார்க்க எம்.பிக்களும், அவர்களது உதவியாளளர்களும் நிறைய நேரத்தை செலவிடுவது தெரிய வந்துள்ளதாக இங்கிலாந்து வரி கட்டுவோர் அமைப்பைச் சேர்ந்த மாத்யூ சின்க்ளேர் தெரிவித்துளள்ளார்.

மக்களையும் பாருங்கப்பா

மக்களையும் பாருங்கப்பா

சின்க்ளேர் மேலும் கூறுகையில், இந்த வேலையை விட்டு விட்டு மக்களுக்காகவும், முக்கியப்பிரச்சினைகளுக்காகவும் மக்கள் பிரதிநிதிகள் அதிக நேரம் செலவிட்டால் நல்லது என்றார்.

English summary
Computers in the British parliament were used by MPs and their staff to access pornographic websites 300,000 times over the past year, a media report said. The total represents more than 820 sites a day, the Daily Mail reported citing data released by the Palace of Westminster IT bosses Tuesday in response to information request.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X