For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

24 நாட்கள் சிறை பிடிப்புக்கு பின்னர் இந்திய எண்ணெய் கப்பலை விடுவிக்க ஈரான் உத்தரவு!

By Mathi
Google Oneindia Tamil News

டெஹ்ரான்: இந்திய எண்ணெய் கப்பலை 24 நாட்கள் சிறை பிடித்து வைத்திருந்த ஈரான் இன்று அதை விடுவிக்க உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஈராக்கில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு அக்டோபர் 12-ந் தேதியன்று இந்திய அரசுக்குச் சொந்தமான எம்டி தேஷ் சாந்தி என்ற எண்ணெய் கப்பல் ஈரான் துறைமுகம் வழியாக இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த எண்ணெய் கப்பலை வழிமறித்த ஈரான் கடற்படை அதை தடுத்து நிறுத்தி துறைமுகத்துக்கு கொண்டு சென்றது.

தங்களது நாட்டு கடற்பரப்பை மாசுபடுத்திவிட்டது இந்திய எண்ணெய் கப்பல் மாசுபடுத்தி விட்டது என்பதுதான் ஈரானின் புகார். இதைத் தொடர்ந்து கடந்த 24 நாட்களாக பந்தார் அப்பாஸ் துறைமுகத்திலேயே இந்திய எண்ணெய் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்தக் கப்பலை விடுவிக்க பெருந்தொகையான பணம் பேரமும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் இன்று இந்திய எண்ணெய் கப்பலை விடுவிக்க ஈரான் அரசு உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஈராக்கிடம் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்த கோபத்தில்தான் ஈரான் இப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

English summary
An Indian oil tanker seized by Iran in August for allegedly polluting Gulf waters has been allowed to leave the port where it was held, an Iranian official said on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X