For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகப் பொருளாதாரத்தை உயர்த்தி நிறுத்த செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு மாநாடு...மன்மோகன் பங்கேற்பு

Google Oneindia Tamil News

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: உலகப் பொருளாதார நெருக்கடி, கரன்சி மதிப்பு வீ்ழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக செயின்ட் பீ்ட்டர்ஸ்பர்க் நகரில் ஜி 20 மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டுள்ளார்.

உலகத் தலைவர்கள் பலரும் மாநாட்டுக்காக குழுமியுள்ளனர். இந்திய உயர் மட்டக் குழுவுடன் பிரதமரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வந்துள்ளார்.

இந்தியாவில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பணவீக்கம் அதிகரிப்பு, பொருளாதார நலிவு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் தலைக்கு மேல் போய்க் கொண்டுள்ள பின்னணியில் பிரதமர் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்.

கரன்சி மதிப்பு வீழ்ச்சி

கரன்சி மதிப்பு வீழ்ச்சி

இந்தியா மட்டுமல்லாமல், ஜி 20 அமைப்பில் இடம் பெற்றுள்ள பல்வேறு நாடுகளிலும் கரன்சி மதிப்பு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

தலைவர்களுடன் பேச்சு

தலைவர்களுடன் பேச்சு

இந்த மாநாட்டின்போது பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் சந்தித்துப் பேசவுள்ளார்.

பிரிக் தலைவர்களுடன் தனி சந்திப்பு

பிரிக் தலைவர்களுடன் தனி சந்திப்பு

அதேபோல பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களுடனும் தனியாக சந்தித்துப் பேசவுள்ளார் மன்மோகன் சிங்.

சனிக்கிழமை திரும்புகிறார்

சனிக்கிழமை திரும்புகிறார்

மாநாட்டை முடித்துக் கொண்டு சனிக்கிழமை தாயகம் திரும்புகிறார் பிரதமர்.

2008 முதல் முக்கியத்துவம்

2008 முதல் முக்கியத்துவம்

ஜி 20 அமைப்புகளின் மாநாடு 2008ம் ஆண்டு முதல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக மாறியுள்ளது. உலகப் பொருளாதாரம் குறித்த முக்கிய பேச்சுக்கள், ஆலோசனைகள் இதில் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தியா தவிர

இந்தியா தவிர

இந்த கூட்டமைப்பில் இந்தியா தவிர அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவூதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் ஆகியவையும் உறுப்பு நாடுகளாக உள்ளன.

ஆரம்பத்தில் அமைச்சர்கள், ஆளுநர்கள் மட்டுமே

ஆரம்பத்தில் அமைச்சர்கள், ஆளுநர்கள் மட்டுமே

ஆரம்பத்தில் இந்தமாநாட்டில் சம்பந்தப்பட்ட நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கிகளின் ஆளுநர்கள்தான் இதில் கலந்து கொண்டனர். 2008 முதல் தலைவர்கள் பங்கேற்க ஆரம்பித்தனர்.

English summary
Prime Minister Manmohan Singh arrived in St Petersburg to join other leaders at the 8th G20 summit and find ways to tackle the challenges faced by the global economy, especially the turmoil in currency markets. With the economy stooping so low in the country, will Singh get any ideas to bring it up, only time will show. But by then, the plans are to meet several foreign leaders and "talk". Apart from attending the summit and holding bilateral talks, the PM will also meet with leaders from Brazil, Russia, China and South Africa, which collectively form the BRICS group.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X