For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கராச்சியில் கிரிமினல்கள் தினமும் சம்பாதிப்பது ரூ.83,00,00,000

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கராச்சி: பாகிஸ்தானில் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் சிரிமினால் வேலைகளால் தினமும் 83,00,00,000 ரூபாய் வருமானம் ஈட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானில் வர்த்தக நகராக திகழ்வது கராச்சி. இங்கு கிரிமினல் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகம். நூற்றுக்கணக்கான ரவுடி கும்பல்கள் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆள் கடத்தல், வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல் என பல்வேறு கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உலகிலேயே கிரிமினல் குற்றவாளிகள் அதிகம் நிறைந்த நகரங்களில் ஒன்றாகவும் கராச்சி திகழ்கிறது.

தினசரி 10 கொலை

கராச்சி நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் தினமும் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்படுகிறார்கள். இதன் மூலம் தினமும் அவர்கள் 300 கோடி ரூபாய் வரை சம்பாதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

கறுப்பு பணம்

அதுமட்டுமல்லாமல் ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் தினமும் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு கறுப்பு பணங்களை சம்பாதிப்பதாகவும் அந்த தகவல் கூறுகிறது.

ஆள்கடத்தல், வழிப்பறி

கராச்சியில் சட்டவிரோதமாக நடத்தப்படும் கிரிமினல் குற்றவாளிகள் சட்டவிரோத பார்கிங், ஆள் கடத்தல், வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல் என பல்வேறு செயல்களில் ஈடுபட்டும் குற்றவாளிகள் ஒரு நாளில் 83,00,00,000 ரூபாய் வரை பணம் சம்பாதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார், மொபைல்போன்

கராச்சியில் ஒரு நாளில் சராசரியாக 40-50 மோட்டார் சைக்கிள்கள், 20-25 கார்கள், 125-150 மொபைல்கள் திருடப்படுகின்றன எனத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Criminal gangs in Pakistan's financial capital Karachi generated a staggering Rs 830 million daily in black economy, according to a report. The report found extortion, ransom from kidnappings, street crimes and illegal parking lots and vendors and illegal electricity connections as main contributors to the burgeoning illegal economy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X