For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழர்கள் எதிர்ப்பை புறந்தள்ளிய மத்திய அரசு: இலங்கைக்கு 2 போர்க்கப்பல்களை வழங்க முடிவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

India Plans to give 2 War Ships to Sri Lanka?
டெல்லி: இலங்கை கடற்படையை வலுப்படுத்துவதற்காக அந்நாட்டிற்கு 2 போர்க்கப்பல்களை இந்தியா வழங்க உள்ளது. இந்த கப்பல்களை கட்டும் பணி கோவாவில் நடக்கிறது.

மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. இலங்கைக்கு நாட்டு ராணுவத்தினர் அங்குள்ள தமிழர்களையும், தமிழக மீனவர்களையும்தான் தாக்கி கொடுமைப்படுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து இலங்கையுடனான இந்தியாவின் ராணுவ உறவை துண்டிக்க வேண்டுமென்றும், அந்நாட்டு ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது என்றும் தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் தமிழர்களை தாக்கி வரும் இலங்கைக்கு ராணுவ ரீதியில் உதவக்கூடாது என்ற தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை, மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது.

அந்தவகையில் இலங்கைக்கு 2 போர்க்கப்பல்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடல் எல்லையை பலப்படுத்த உதவுமாறு இலங்கை அரசு கேட்டுக்கொண்டதையடுத்து இந்த கப்பல்கள் அந்நாட்டிற்கு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கப்பல்கள் கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட உள்ளன. 2017-18 ஆம் ஆண்டில் இந்த கப்பல்கள் இலங்கைக்கு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
India plans to give two warships to strengthen Sri Lanka’s coastal protection. These 2 warships are being built on the site of the shipyard in Goa. Information says in the year 2017 – 2018 two warships will be given to Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X