For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறிய கடைகளில் ஆசிட் விற்க தடை: மத்திய அரசு உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Acid
டெல்லி: சிறிய கடைகளில் ஆசிட் விற்கப்படுவதை தடை செய்வதற்கான சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட டெல்லியை சேர்ந்த லஷ்மி என்ற இளம்பெண், ஆசிட் விற்பனையை முறைப்படுத்தும்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதைத் தொடர்ந்து, ஆசிட் விற்பனையை முறைப்படுத்தும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி சிறிய கடைகளில் ஆசிட் விற்கப்படுவதை தடை செய்வதற்கான சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். அரசால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காட்டிய பிறகே, ஆசிட் விற்க வேண்டும்.

ஆசிட் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள், ஆசிட் கையிருப்பு பற்றி முறையான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். அப்படி செய்யாதவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

English summary
The Home Ministry has asked the State governments to ban over-the-counter sale of acids as directed by the Supreme Court in its July order to curb growing incidents of attacks on women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X