For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியன் வங்கி மோசடி வழக்கில் கோபாலகிருஷ்ணனுக்கு ஓராண்டு சிறை

By Mathi
Google Oneindia Tamil News

Gopala krishnan
சென்னை: இந்தியன் வங்கியில் முறையான அனுமதி இன்றி தனியார் நிறுவனத்துக்கு ரூ10 கோடி கடன் கொடுத்து ரூ31.76 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கில் இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சென்னை முத்தியால்பேட்டை இந்தியன் வங்கி கிளையானது சத்தியம் புட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்துக்கு 1997 மே மாதம் ரூ.10 கோடி கடன் வழங்கியது. இந்த கடன் வழங்க முறையான அனுமதியை வங்கி அதிகாரிகள் பெறவில்லை.

இதன்மூலம், இந்தியன் வங்கிக்கு ரூ.31.75 கோடி இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் 1997-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இந்தியன் வங்கி தலைவராக 1992 முதல் 1996 வரை பதவி வகித்த எம்.கோபாலகிருஷ்ணன், தொழிலதிபர் எம்.வரதராஜன் உள்ளிட்ட 16 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு சென்னையிலுள்ள சி.பி.ஐ. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த எஸ்.மாலதி நேற்று தீர்ப்பளித்தார்.

அத் தீர்ப்பில், கோபாலகிருஷ்ணன், வரதராஜன் உள்பட அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அனைவருக்கும் தலா ஓர் ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.4.5 லட்சம் அபராதமும் விதிக்கிறேன் என்றார்.

English summary
Former Indian Bank Chairman and Managing Director M Gopalakrishnan and other former top bank officials were sentenced to one year rigorous imprisonment by a CBI court here for allegedly causing a loss of Rs 31.75 crore by granting loans without proper security between 1992-96.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X