For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோன் பனேகா குரோர்பதி -7வது அத்தியாயத்தின் முதல் கோடீஸ்வரர் தாஜ் முகம்மது ரங்ரீஸ்!

Google Oneindia Tamil News

மும்பை: அமிதாப் பச்சன் நடத்தி வரும் 7வது கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் முதல் கோடீஸ்வரர் என்ற பெருமையை உதய்ப்பூரைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் தாஜ் முகம்மது ரங்ரீஸ் பெற்றுள்ளார்.

2013 கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் அவர் சிறப்பாக வெற்றி பெற்று ரூ. 1 கோடிப் பரிசைத் தட்டிச் சென்றுள்ளார்.

பரிசை வென்ற பின்னர் அவர் சொன்ன வார்த்தை - என்னால் நம்பவே முடியவில்லை என்பதே.

ஒரு கோடியை வென்று தரும் கேள்வியை அமிதாப் பச்சன் கேட்டபோது அரங்கமே படு நிசப்தமாக காணப்பட்டது. ஆனால் ரங்ரீஸ் சூப்பராக பதிலை சரியாக சொல்லி அத்தனை பேரையும் உற்சாகக் கடலில் ஆழ்த்தினார்.

'Kaun Banega Crorepati 7' gets its first crorepati

உதய்ப்பூரில் உள்ள லேக்ஸ் பதேகர் பள்ளியில் வரலாற்று ஆசிரியராக இருக்கிறார் ரங்ரீஸ். இவருக்கு 7 வயதில் மகள் உள்ளார். இவருக்கு பாதிப் பார்வை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தான் வென்றுள்ள பணத்தை வைத்து தனது மகளுக்கு மீண்டும் பார்வை முழுமையாக திரும்புதவற்கான சிகிச்சைகளை செய்யப் போவதாக கூறியுள்ளார் ரங்ரீஸ்.

மேலும் ஒரு வீடு வாங்க விரும்புகிறேன். வசதியில்லாத 3 பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி உதவி செய்யப் போகிறேன். இரண்டு ஆதரவற்ற பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கப் போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 15ம் தேதி ரங்ரீஸ் கலந்து கொண்ட நிகழ்ச்சி சோனி டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.

English summary
Taj Mohammed Rangrez, a history teacher from Udaipur, created history by becoming the first person to win a whopping Rs 1 crore on TV reality game show 'Kaun Banega Crorepati 2013'. He said, "Can't believe it". All came to a standstill when the show's host, megastar Amitabh Bachchan, tossed the Rs 1 crore question to hot seat contestant Rangrez. But he answered it correctly to become the first contestant to win the desired title of a 'crorepati' on the seventh edition of the show.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X