For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முஸ்லீம்கள் எதிர்ப்பு எதிரொலி.. மிஸ் வேர்ல்ட போட்டி ஜகார்த்தாவிலிருந்து பாலிக்கு மாற்றம்

Google Oneindia Tamil News

ஜகார்த்தா: முஸ்லீம்களின் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து ஜகார்த்தாவில் நடைபெறுவதாக இருந்த மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டி, பாலி தீவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மிஸ் வேர்ல்ட் போட்டி, முஸ்லீம் நாடான ஜகார்த்தாவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஆரம்பமான பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது.

ஆம், தற்போது மிஸ் வேர்ல்ட் போட்டி இந்துக்கள் அதிகம் வசிக்கும் பாலி தீவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடங்கிய போராட்டங்கள்....

தொடங்கிய போராட்டங்கள்....

முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் நாடு இந்தோனேசியா. தலைநகர் ஜகார்த்தாவில் மிஸ் வேர்ல்ட் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டவுடனேயே அங்கு போராட்டங்கள் தொடங்கி விட்டன.

நோ பிகினி...

நோ பிகினி...

இதையடுத்து இந்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் போட்டியில் பிகினி பிரிவு இருக்காது என்று போட்டி அமைப்பாளர்கள் அறிவித்தனர். இருப்பினும் போராட்டங்கள் தொடர்ந்தன. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலி தீவு....

பாலி தீவு....

இதையடுத்து போட்டி ஜகார்த்தாவுக்குப் பதில் பாலி தீவில் நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 28ம் தேதி இப்போட்டி நடைபெறுகிறது.

போட்டி அமைப்பாளர்கள்....

போட்டி அமைப்பாளர்கள்....

மிஸ் வேர்ல்ட் போட்டியின் அனைத்துப் பிரிவுகளுமே பாலி தீவிலேயே நடைபெறும் என்று போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

English summary
INDONESIA says the final of Miss World later this month will take place on the Hindu-majority holiday island of Bali instead of near the capital, after days of Muslim hardline protests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X