For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உ.பி. வன்முறை விவகாரம்.. தினம் ஒரு பேச்சு என்பது இதுதானோ?

By Mathi
Google Oneindia Tamil News

SP Minister Azam Khan blames local administration, Akhilesh govt
லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்ட வன்முறை விவகாரத்தில் அரசு நிர்வாகத்தை குறை கூறியிருந்தார் மாவட்டத்துக்குப் பொறுப்பான அமைச்சரான ஆசம் கான். ஆனால் மறுநாளே "எதிர்க்கட்சிகள் சதி" என்று வசைபாடவும் தொடங்கிவிட்டார்.

முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சியில் மூத்த அமைச்சராக இருப்பவர் ஆசம் கான். இவர்தான் இப்போது முதல்வர் அகிலேஷ் யாதவின் வழிகாட்டியும் கூட. இந்த ஆசம்கானின் பொறுப்பில் உள்ள முசாபர்மாவட்டம்தான் மிகப் பெரும் வன்முறையை எதிர்கொண்டிருக்கிறது.

ஆனால் அமைச்சர் ஆசம்கானோ, நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எவ்வளவு செல்வாக்கான நபராக இருந்தாலும் தூக்கி சிறையில் போடவும். தடை உத்தரவு அமலில் இருக்கும் போது எப்படி இவ்வளவு பெரிய வன்முறை வெடித்தது? உள்ளூர் நிர்வாகம் இயங்கவில்லையா என்றெல்லாம் கொந்தளித்தார் ஞாயிற்றுக்கிழமையன்று.

ஆனால் லக்னோவில் நேற்று முதல்வர் அகிலேஷ் யாதவ் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசம் கான், எதிர்க்கட்சிகள் மோசமாக அரசியல் செய்கின்றன. அவர்களை நாம் குறைகூறப் போவதே இல்லை..அவர்களே தங்களது முகத்தைக் காட்டி அம்பலப்பட்டுக் கொண்டனர் என்று கூறியுள்ளார்.

தினம் ஒரு பேச்சு என்பது இதுதானோ?

English summary
The Uttar Pradesh government's handling of the communal violence in Muzaffarnagar has come in for sharp criticism from within the Akhilesh Yadav ministry, with senior minister Azam Khan publicly blaming the local administration for the conflagration.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X