• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் உடல் ஃபிட்டாக உள்ளதா? இந்த மூன்று எளிய சோதனைகள் மூலம் கண்டுபிடிக்கலாம்

Google Oneindia Tamil News

நம்மைச் சுற்றியுள்ள பெரும்பாலான சிறு வணிகர்கள் வருவாயைக் அதிகரிக்கும் ஐடியாவை புரிந்து வைத்துள்ளனர். அதாவது எந்தவொரு காரணிகளும் மாறாமல் இருக்கும்போது ​,​ஒரு கட்டத்தில் நாம் கூடுதல் நேரத்தையும் முயற்சியையும் செலுத்தினால் கிடைக்கும் முடிவுகளில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் இருக்கும் என்பதே அது.

நேரம் எப்போதும் குறைவாக இருப்பதால், தொழில்முனைவோர் தங்கள் நேரத்தை எங்குச் செலவிட வேண்டும் என்பதைச் சரியாகக் கண்டுபிடித்துச் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

3 Simple Tests Busy Entrepreneurs Can Use to Gauge Their Strength and Endurance

இதே போல உடல்நலம் மற்றும் உடற்தகுதியும் தொழில்முனைவோருக்கு முக்கியமானது. மற்ற தொழில்முனைவோரைப் போல நீங்களும் ஃபிட்டாக இருக்க முயல்வீர்கள். இது உங்கள் உடல்நலனுக்கு மட்டும் நல்லது அல்ல. உடற்பயிற்சி என்பது மன அழுத்தம் அதிகமாக உள்ளபோதும் சிறப்பாகச் செயல்பட உதவுகிறது. இதன் மூலம் நம் மனநிலையை 12 மணி நேரம் வரை சிறப்பாக வைத்திருக்க முடியும். உடற்பயிற்சி நம்மைப் புத்திசாலியாகவும் மாற்றும்.

ஃபிட்னஸ் என்றால்?

இருந்தாலும் எவ்வளவு ஃபிட்டாக இருக்க வேண்டும்? நீங்கள் மாரத்தான் ஓட விரும்பினால், அப்போது உங்களுக்கு பிட் என்பதன் வரையறை வேறுபடும். ஆனால் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் இருப்பது போல ஃபிட்டாக இருந்தால் போதும் என்றால் கீழே சொல்லப்பட்டுள்ள பயிற்சிகளை வீட்டிலேயே செய்து பாருங்கள்.

நீங்கள் ஃபிட்னஸில் "சராசரி" நிலையில் இருந்தால் நல்லது. அதேநேரம் மிகச் சிறப்பான ஃபிட்னஸை நோக்கி நகர்ந்தால் அது மிகவும் நல்லது. இதை அதிகரிப்பதன் மூலம் உங்கள் வருமானத்தை அதிகரிக்க முடியலாம்.

மேல் உடல் வலிமையை அதிகரிக்க

மேல் உடல் வலிமையை புஷ் அப்புகள் மூலம் சோதனை செய்யுமாறு அமெரிக்க விளையாட்டு மருத்துவக் கல்லூரி பரிந்துரை செய்கிறது.

முதலில் உடலை மேலே தள்ளி புஷ் அப்களை எடுக்கத் தொடங்குகள். பின்னர் 90 டிகிரிக்கு உடலை எடுத்துச் செல்லுங்கள். பின் மெல்லக் கீழே எடுத்து வாருங்கள். பெண்கள் மாற்றியமைக்கப்பட்ட (முழங்கால்களிலிருந்து) புஷ் அப்களை செய்யலாம்.

ஒரு செட்டில் எத்தனை புஷ் அப்களை செய்ய முடிகிறது என்பதைக் குறித்து வையுங்கள். ஒருவரது மேல் உடல் வலிமை எந்தளவு உள்ளது என்பதை இதன் மூலம் கண்டறியலாம். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதன் மூலம் ஒரு ஐடியா உங்களுக்கு கிடைக்கும்.

ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். 40 அல்லது அதற்கு மேற்பட்ட புஷ் அப்களைச் செய்யக்கூடிய ஆண்களுக்கு 10 அல்லது அதற்கும் குறைவான புஷ் அப்களை செய்யக்கூடியவர்களைக் காட்டிலும் திடீர் இதய பாதிப்பு ஏற்படுவது 96 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. சொல்லப்போனால், புஷ் அப்கள் ஏரோபிக் திறனைக் காட்டிலும் இதய நோய் அபாயத்தையே அதிகளவில் குறைக்கிறது.

வாரத்திற்கு மூன்று முறை 10 நிமிடங்கள் வரை புஷ் அப்களை செய்யுங்கள், மூன்று வாரங்களுக்குப் பிறகு நீங்கள் நிச்சயமாக வலுவாக உணர்வீர்கள்.

கீழ் உடல் வலிமையை அதிகரிக்க

Squats மூலம் கீழ் உடல் வலிமையைத் தெரிந்துகொள்ளலாம். நீங்கள் நாற்காலி இல்லாமல், ஆனால் அதில் அமருவது போல உட்காருங்கள். அப்போது ​​உங்கள் தொடைகளைக் கால்களில் இருந்து 90 டிகிரி கோணத்தில் இருக்க வேண்டும். பின்னர் இடுப்பில் கைகளை வைத்து, நாற்காலியை மேல் உட்காருவது போல வரை உங்களைத் தாழ்த்திக் கொள்ளுங்கள், பின் மீண்டும் மேலே எழவும். முடிந்தவரை இதைச் செய்யுங்கள்.

மற்ற செயல்களைப் போலவே Squatsகளை அதிகரிப்பது என்பதற்கு நேரமும் முயற்சியும் மட்டுமே தேவைப்படும்: நான்கு அல்லது ஐந்து செட் Squatsஐ வாரத்திற்கு மூன்று முறை செய்யுங்கள். மூன்று வாரங்களில் நீங்கள் நிச்சயமாக வலுவாக உணர்வீர்கள்.

இது உங்கள் கீழ் உடலின் வலிமையை அதிகரிக்க உதவும், உடலின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும் காயமடையும் அபாயத்தையும் குறைக்கும். நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்யும் நபர்களுக்கும் இந்த பயிற்சி உதவும்.

இதயத்திற்கான உடற்தகுதி

இதய உடற்தகுதி மதிப்பீடு செய்ய பல்வேறு வழிகள் உள்ளன. மன அழுத்தச் சோதனைகள். இதய துடிப்பு. ஒருவரால் எவ்வளவு வேகம் ஓட முடிகிறது ஆகியவை மூலம் கண்டறியலாம்.

அதேபோல VO2 மூலமும் அறியலாம். அதாவது ஒருவரது உடல் அதிகபட்சம் எந்தளவு ஆக்சிஜனை உள்ளிழுக்கும் என்பதைப் பொறுத்து இதை நாம் முடிவு செய்யலாம், பொதுவாக, உங்கள் VO2 அதிகமாக இருந்தால், உங்கள் இதயம் பலமாக இருப்பதாகப் பொருள்.

ஃபிட்னஸ் கால்குலேட்டர்களைப் பயன்படுத்தி உடலின் VO2ஐ தெரிந்துகொள்ளலாம். அல்லது ஒரு மைல் தூரம் நடப்பதன் மூலம் உங்களில் இதய ஃபிட்னஸை தெரிந்துகொள்ளலாம்.

இதயத்தின் ஃபிட்னஸை மேம்படுத்தப் பல வழிகள் உள்ளன. நடைப்பயிற்சியில் இருந்து இதைத் தொடங்கலாம். ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல், படகோட்டுதல், மூலம் அதிகரிக்கலாம். ஒரே நேரத்தில் இதய ஃபிட்னஸை இரட்டிப்பு பலமாக்க HIIT உடற்பயிற்சிகளையும் செய்யலாம். ஒரு நாளைக்கு 11 நிமிடங்கள் செய்வதே உடலை முக்கிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

ஒருவர் மிகச் சிறப்பான ஃபிட்னஸை கொண்டிருக்கத் தேவையில்லை. மாறாக நல்ல ஃபிட்னஸை வைத்திருந்தாலேயே பல மணிநேரம் நீங்கள் ஜிம்மில் நேரத்தைச் செலவிட வேண்டியதில்லை.

பெரிய அளவில் பலனைப் பெற சில முக்கிய விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

English summary
3 Simple exercise to keep body fit
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X