For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7 வயதில் ரத்த புற்றுநோய்.. சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் பெற்றோர்.. சிறுவனுக்கு கொஞ்சம் உதவுங்கள்

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் 7 வயது சிறுவன் அதிராஜ் சிகிச்சைக்கு உங்களால் முடிந்த உதவியை செய்திடுங்கள்.

சென்னை: ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் 7 வயது சிறுவன் அதிராஜ் சிகிச்சைக்கு உங்களால் முடிந்த உதவியை செய்திடுங்கள்!

கொஞ்சம் யோசித்து பாருங்கள், ஒரு 7 வயது குழந்தைக்கு லம்போர்கினி கார் குறித்து தெரியுமா, அதை ஒருநாள் வாங்குவது குறித்து அந்த குழந்தை யோசிக்குமா? ஆம், ஒருநாள் நான் லம்போர்கினி கார் வாங்குவேன், அதில் அப்பாவை கூட்டி செல்வேன் என்று அதிராஜ் கூறிய போது அவனின் குடும்பமே திகைத்து நின்றது. அந்த அளவிற்கு பல விஷயங்களை தெரிந்த புத்திசாலி சிறுவன் அதிராஜ்.

7-year-old Adhiraj’s attitude alone cannot defeat blood cancer: Needs help

ஆனால் ஹைப்பர் ஆக்ட்டிவாக இருக்கும் அந்த கொழுகொழு சிறுவனுக்கு அதற்கு பின் பல அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நடந்தது. ஒருநாள் அதிராஜ் முதுகில் ஏற்பட்ட பெரும் வலி அவனுக்கு தன்னுடைய குறும்பு தனத்தை எல்லாம் மறக்க வைத்தது. அவன் தன் சிரிப்பை மறந்தான், தன்னுடைய கார் கனவுகளை மறந்தான். மருத்துவ அறிக்கையும் அதிராஜூக்கு பெரிய பிரச்சனை எதுவும் இருப்பதாக சொல்லவில்லை.

ஆனால் அதிராஜூக்கு வலி மட்டும் குறையவே இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக அதிராஜ் இயல்பு நிலையை இழக்க தொடங்கினான். அவன் நடை கொஞ்சம் தள்ளாட தொடங்கியது. அவனின் வலது காலில் பிரச்சனை ஏற்பட்டது. அதன்பின் படுத்த படுக்கையானான். அதன்பின் செய்யப்பட்ட புதிய சோதனை அதிராஜ் பெற்றோருக்கு அதிர்ச்சி அளித்தது.

அந்த சோதனைக்கு பின்தான் அதிராஜூக்கு ரத்த புற்றுநோய் (Acute Lymphoblastic Leukemia) இருப்பது கண்டறியப்பட்டது. ஆம், அதிராஜ் நிலைமை மிக மோசமாக இருந்தது. அவனின் மத்திய நரம்பு மண்டலமே (Central Nervous System) பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் உடல் செயலிழக்கும் அறிகுறிகள் தென்பட தொடங்கியது. உடலின் கீழ் பகுதி உணர்ச்சிகளை இழக்க தொடங்கியது.

இதனால் அதிராஜ் மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டது, அதேபோல் சிறுநீர் கழிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. மேலும் அதிராஜ் தன்னுடைய கேட்கும் திறனையும் இழக்க தொடங்கினான். இதெல்லாம் போக மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிராஜின் சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்கள் எண்ணிக்கையும் குறைய தொடங்கியது. இதனால் அந்த சிறுவனுக்கு மோசமான இன்பெக்ஷன் பிரச்சனைகள் வர வாய்ப்பு உருவாகி உள்ளது.

ஜபல்பூர் மருத்துவர்களின் அறிவுரையை அடுத்து உடனடியாக அதிராஜ் மும்பை கொண்டு வரப்பட்டான். தற்போது அதிராஜ் 52 வார கீமோதெரபி எடுத்துக் கொண்டு இருக்கிறான். இந்த சிகிச்சை எடுக்க தொடங்கிய பின் அதிராஜ் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற தொடங்கினான். சிகிச்சையின் பலன் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய தொடங்கியது.

முக்கியமாக தனது வலது காலில் அதிராஜ் உணர்ச்சிகளை பெற்றான், மேலும் கால்கள் மூலம் லேசாக நடக்க முடிந்தது. இதுவரை 52 வாரங்களில் 22 வாரங்கள் சிகிச்சை முடிந்துவிட்டது. அதிராஜ் சிகிச்சைக்காக தான் வைத்திருந்த அனைத்து சேமிப்புகளையும் அவரின் அப்பா சஞ்சய் செலவு செய்துவிட்டார். இப்போது அவரிடம் நம்பிக்கையை தவிர ஒன்றும் இல்லை.

சஞ்சய் ஆசிரியராக வேலை பார்த்து மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து வந்தார். ஆனால் இப்போது அந்த பணியையும் கவனிக்க முடியாமல், விடுப்பில் சம்பளம் இன்றி இருக்கிறார். இவர் தன்னுடைய மனைவியுடன் மும்பையில் தனது மகனின் சிகிச்சையை கவனித்துக் கொண்டு இருக்கிறார். மும்பைக்கு வீடு மாறி குடியேறியது, தன் மகனின் மருத்துவ செலவு, தனது மகளின் படிப்பு செலவு எல்லாம் சேர்த்து அதிராஜ் அப்பாவை முடக்கி உள்ளது.

அவரின் சேமிப்பு எல்லாம் தீர்ந்துவிட்டது. மீதம் இருக்கும் சிகிச்சையை மேற்கொள்ள அதிராஜ் அப்பாவிற்கு 9 லட்சம் ரூபாய் தேவை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

எப்படி உதவி செய்வது:

யாராவது ஒரு வேலையை, பணியை பாதியில் விட்டுவிட்டு செல்வதை விரும்பவுவார்களா? அதுவும் முடிக்கும் தருவாயை நெருங்கிய பின்? அதுவும் ஒரு குழந்தையின் வாழ்க்கை என்றால் நீங்கள் அதை பாதியில் முடித்து விட்டு திரும்ப மாட்டீர்கள் தானே? அதிராஜ் குடும்பமும் அதைத்தான் நினைக்கிறார்கள். அதிராஜ் பெற்றோர்கள் சிறுவனின் சிகிச்சைக்காக பல விஷயங்களை தாண்டி வந்துவிட்டனர். தற்போது அதிராஜ் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறான். இப்போது அவர்களால் சிகிச்சையை கைவிட்டுவிட்டு, பழைய நிலைக்கு திரும்ப முடியாது.

உங்களின் கருணையும், நல்லெண்ணமும் அதிராஜ் உயிரை காக்கும், அவனுக்கு புதிய உயிரை கொடுக்கும். அவனின் குடும்பத்திற்கு தற்போது இருப்பதெல்லாம் மக்கள் மீதான நம்பிக்கை மட்டுமே, நீங்கள் உதவி செய்வீர்கள் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். தன்னுடைய சிறுவனுக்காக அவனின் பெற்றோர்கள் இத்தனை நாட்கள் போராடியது வீணாக கூடாது என்றால் நீங்களும் கொஞ்சம் உதவ வேண்டும்.

அதிராஜ் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்றால் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் அதிராஜ் உயிரை காக்கும். அதேபோல் இங்க செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.. நன்றி!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X