For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7 வயது குழந்தையை காப்பாற்ற உடனடி அறுவை சிகிச்சைக்கு உதவுங்கள்!

சந்தீப் எனும் விவசாயியின் ஏழு வயது மகன் சுபாஷ் எலும்பு மஜ்ஜை பிரச்சனையான் அவதிப்பட்டு வருகிறான். உங்களாது சிறிய உதவி அவனது வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும். உங்களால் முடிந்தால் உதவுங்கள்.

By Staff
Google Oneindia Tamil News

"அப்பா நாம ஏன் அடிக்கடி ஹாஸ்பிடல் வரோம். எப்போ டாக்டர் அங்கிள் என்னை வர வேண்டான்னு சொல்லுவாங்க. என்ன குணப்படுத்த முடியாதாப்பா ". என்று என் 7 வயது குழந்தை சுபாஷ் என்னிடம் கேட்டான் . "அப்பா ரோகன், ராதிகா, ரக்ஷனா அவங்கள்ளா என்ன மாதிரி ஹாஸ்பிடல் வரதில்லையே ஏன் ப்பா?". என்றான். அவன் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் என்னை கலங்க வைத்தது. அவன் ஒவ்வொரு தடவையும் மருத்துவமனைக்கு செல்வதை நினைத்து ரெம்ப கவலைபடுகிறான் என்பது எனக்கு புரிந்தது. இதனால் மருத்துவரிடம் இதற்கான தீர்வை பற்றி கேட்க முற்பட்டேன். அவர் சுபாஷ்க்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார். ஒவ்வொரு நாள் இரவும் அவன் தூங்குவதற்கு முன் என்னிடம் கேட்பான் அப்பா நாளைக்கு எனக்கு ஆப்ஷேரன் முடிஞ்சிடுமா ப்பா. இனி நாம ஹாஸ்பிடல் பக்கம் போகத் தேவையில்லையா ப்பா என்பான். அவனுடைய எல்லா கேள்விகளுக்கும் என் பதில் இல்லை என்பதை மனதில் புதைத்து கொண்டு, ஆமாம் என்பதாகத்தான் இருக்கும். அவன் ரொம்ப சின்ன பையன் எப்படி சொல்வேன் இது அப்பாவால் முடியாது என்பதை. அவன் முகத்தை பார்க்கும் போதெல்லாம் என்னுடைய கஷ்டத்தை எனக்குள்ளே மறைத்து விடுவேன். என் மகன் தலசீமியா என்ற இரத்த அழிவுச் சோகையில் இருந்து மீள 22 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது.

Ketto donation

இந்த அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் ஒவ்வொரு மாதந்தேறும் என் மகனுக்கு இரத்தமேற்றுதல் வேண்டும். சுபாஷ் வாழ்க்கை ஹாஸ்பிடலும் வீடுமாக அலைய வேண்டிய நிலை இருக்கும். ஒவ்வொரு மாதம் இறுதியிலும் அவன் வலிமை குறைந்து ரெம்ப சோர்வாக காணப்படுவான். மற்ற பிள்ளைகள் மாதிரி அவனால் சுறுசுறுப்பாக விளையாட கூட முடியாது. ஒவ்வொரு முறையும் வலிகள் நிறைந்த இரத்தமேற்றுதல் முறையை செய்த பிறகே அவனால் மறுவாழ்வை பெற முடியும். இந்த இரத்தமேற்றுதல் ஒரு சக்தி அவனுக்கு அவ்வளவு தான். ஆனால் அவன் நோய் முழுவதுமாக குணமடையாது. இந்த நோயிலிருந்து முழுவதுமாக விடுபட்டு, மற்ற குழந்தைகள் போல் அவனும் துள்ளி விளையாட எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. அவன் வாழ்நாள் முழுவதும் இரத்தமேற்றுதல் இல்லாமல் ஹாஸ்பிடல் போகாமல் வாழ இதுவே அவனுக்கான ஒரே வழி. அவனுக்கு தெரியாது அவனால் இரத்தமேற்றுதல் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்பது.

சுபாஷின் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு உங்கள் நன்கொடை மூலம் உதவிக் கரம் நீட்டுங்கள்.

Ketto donation

என் பெயர் சந்தீப் சுர்ஹார். நான் அகோலாவில் என் மனைவி மற்றும் என் 4 குழந்தைகளுடன் வசிக்கிறேன். நான் ஒரு விவசாயி. என் மாதம் வருமானம் வெறும் 8000 ரூபாய் தான். சுபாஷ்க்கு இதுவரை 80 இரத்தமேற்றுதல் முறைகளை செய்துள்ளேன். இதற்காக 1லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்துள்ளேன். இந்த பணத்தை பிரட்ட ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு வீட்டு கதவை தட்டி கடன் கேட்டு உள்ளேன். நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று எல்லாரிடமும் கடன் கேட்டு உள்ளேன். இந்த மாதந்தேறும் நான் அனுபவிக்கும் கஷ்டங்கள் ஒவ்வொன்றும் என் மனதை ரணமாக்கி கொண்டே இருக்கிறது. நிறைய கஷ்டங்களையும் மறுப்புகளையும் தாண்டி என் மகனின் உயிரை காத்துக் கொண்டு வருகின்றேன். இவ்வளவு கஷ்டப்பட்டும் என்னால் இந்த ஒரு அறுவை சிகிச்சைக்கான பெரிய தொகையை பிரட்ட முடியவில்லை. இந்த அறுவை சிகிச்சை இல்லாமல் என் சுபாஷால் இந்த உலகத்தில் நிம்மதியாக வாழ முடியாது. என்னால் மாதந்தேறும் அவனுக்கு இரத்தமேற்றுதல் செய்ய முடியவில்லை என்றால் அவன் நிலைமை என்னவாகும். அவனால் எப்படி நிம்மதியாக வாழ முடியும், ஏன் அவன் எப்படி எழுந்து நடப்பான் என்று ஒவ்வொரு முறை நினைக்கும் போதும் என் கண்கள் கலங்கி விடுகின்றன. ஒவ்வொரு மாதக் கடைசியும் சுபாஷ்க்கு ரணமான வாழ்க்கை தான். இரத்தமேற்றுதல் இல்லாமல் அவனால் நடக்க கூட முடியாமல் படுக்கையிலேயே தன் வாழ்நாளின் பாதியை கழித்து வருகிறான்.

Ketto donation

என் மகன் 4 மாத குழந்தையாக இருக்கும் போதே இந்த இரத்த அழிவுச் சோகை வந்து விட்டது. 2010ல் அவன் மூன்று மாதக் குழந்தை. தீடீரென்று தாய்பால் குடிப்பதை நிறுத்தி விட்டான். நாங்கள் அவசர அவசரமாக டாக்டர்களிடம் சென்றோம். நிறைய பரிசோதனைகள் செய்தார்கள் எதுவுமே தெரியவில்லை. பிறகு தான் அவனுக்கு இரத்த அழிவுச் சோகை இருப்பது தெரிய வந்தது. இப்பொழுது என் மகனுக்கு 7 வயது. இந்த 7 ஆண்டுகளாக அவன் தன் வாழ்க்கையோடு போராடி வருகிறான்.

சந்தீப் ஒரு விவசாயி. தனது மகனின் அறுவை சிகிச்சைக்கான பணத்தை திரட்ட முடியாமல் கஷ்டப்படுகிறார். உங்களால் முடிந்தால் நன்கொடை அளித்து உதவுங்கள்.

சுபாஷால் இரத்தமேற்றுதல் இல்லாமல் வாழ முடியாது. ஒவ்வொரு மாதமும் இதற்காக 1500 ரூபாய் வரை செலவாகும் என்று டாக்டர்கள் கூறி விட்டனர். இந்த நோய்க்கான நிரந்தர தீர்வு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே. ஆனால் இதற்கு தகுந்த கொடையாளிகளை கண்டறிவதும் மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் தற்போது 3-5 வயதுள்ள என் மகள் ரக்ஷனாவின் எலும்பு மஜ்ஜை சுபாஷ்க்கு பொருந்தியுள்ளது. சுபாஷ் என்னிடம் தன் உயிரைக் காப்பாற்றிய தங்கைக்கு ரக்ஷா பந்தன் நாளில் கயிறு கட்டி நன்றி சொல்கிறேன் என்று சந்தோஷமாக கூறியுள்ளான்.

Ketto donation

என் மகள் எலும்பு மஜ்ஜை சுபாஷ்க்கு பொருந்தியுள்ளது எனக்கு ஒரு திருப்தியை தருகிறது. என் இருண்ட வாழ்க்கையிலிருந்து பாதி தூரம் கடந்த மாதிரி நினைக்கிறேன். நான் மாதந்தேறும் என் மகன் படும் வலியை குறைக்க விரும்புகிறேன், விளையாடுகின்ற வயதில் ஹாஸ்பிட்டலில் காலத்தை கழிக்கும் அவனின் வாழ்வை மீட்டெடுக்க விரும்புகிறேன், மற்ற குழந்தைகளைப் போல் சுபாஷூம் துள்ளிக் குதித்து ஓடியாடி விளையாடுவதை பார்க்கும் அப்பாவாக இருக்க ஆசைப்படுகிறேன். ஆனால் நான் தோல்வியை பிடித்து கொண்டு ஏங்கிக் கொண்டு இருக்கிறேன். உங்கள் ஒவ்வொருவர் உதவியும் எனக்கு வெற்றியை பெற்றுத் தரும். ஒரு அப்பாவின் கனவை மட்டுமல்ல என் மகனின் வாழ்க்கையையும் புத்துயிர் பெறச் செய்யும். தயவு செய்து எனக்கு உதவுங்கள். நன்றி

நீங்கள் சந்தீப்க்கு உதவ நினைத்தால் உங்கள் நன்கொடையை ketto இங்கே அளியுங்கள்.

English summary
Your Donation May Help 7 years Old Subash to Recover From His Bone Marrow Illness!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X