For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விதம் விதமான காளைகள்.. சீறிப் பாய்ந்து ஓடிய வண்டிகள்.. குமரியைக் கலக்கிய பந்தயம்

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: குடியரசு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற பாரம்பரிய மாட்டு வண்டி போட்டியில் ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

நெல்லை, மதுரை, காங்கேயம் உள்ளிட்ட மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து இருந்த காளைகள் சீறி பாய்ந்து அங்கு கூடி இருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

A bullock cart race was held in Kanyakumari on the eve of Republic day.

தட்டு வண்டி, வில் வண்டி என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பட்டன.

70 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள தெற்கு சூரங்குடி பகுதியில் பாரம்பரிய மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது. வைகுண்டர் நற்பணி மன்றம் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டிகளில் குமரி, நெல்லை, மதுரை, காங்கேயம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 40 க்கும் மேற்பட்ட வில் வண்டிகள் மற்றும் தட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

போட்டிகளில் பங்கேற்ற காளைகள் குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடையும் விதமாக சீறி பாய்ந்து அங்கு கூடி இருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தட்டு வண்டி வில் வண்டி என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பட்டன.

தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கவும் அடுத்த தலைமுறைக்கு பாரம்பரிய மாட்டு வண்டி தமிழன் கலாச்சாரம் போன்றவற்றை தெரியப்படுத்தும் விதமாக இது போன்ற போட்டிகளை நடத்துவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

English summary
A bullock cart race was held in Kanyakumari on the eve of Republic day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X