• search
அபுதாபி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"தல"யைப் பாருங்க.. என்னா டைவு.. மேட்ச்சு மிஸ் ஆனாலும்... வாவ் கேட்ச்சு... !

|

அபுதாபி: ஐபிஎல் போட்டிகள் எந்த ரூட்டில் போய்ட்டிருக்கேன்னே பலருக்கும் புரியலை.. காரணம் எதிர்பார்க்காத அணிகள் எல்லாம் கலக்குகின்றன. ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் எல்லாம் சுருண்டு பப்படமாகிக் கொண்டுள்ளன. அதில் முக்கியமானது சென்னை சூப்பர் கிங்ஸ்.

கேப்டன் தோனி என்ற ஒரே காரணத்திற்காக, அந்த மந்திரச் சொல்லுக்காகவே சென்னைக்கு அதிக ரசிகர் கூட்டம் உண்டு. ஆனால் அந்த ஆதிக்கத்தை மும்பை இந்தியன்ஸ் முன்பு தகர்த்து விட்டது. ஆனால் இந்தத் தொடரிலோ வர்றவன் போறவன்ட்ட எல்லாம் அந்த அணி அடி வாங்குவதைப் பார்த்து நமக்கே பாவமாக உள்ளது.

எல்லோரும் தோனியின் உத்திகளைப் போட்டுத் தாக்கிக் கொண்டுள்ளனர். ஆனால் தோனி மட்டும் நிலை குலையாமல் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறார்.. மறுபக்கம் கேதார் ஜாதவும் அவர் பாட்டுக்கு ஜாலியாகத்தான் புழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வழக்கம் போல சென்னை தோல்வியடைந்து விட்டது.

"சேதார" ஜாதவ்.. இதை விட கேவலமா திட்ட முடியுமான்னு தெரியலை.. ஆனாலும் சிஎஸ்கே விடாது!

தோனியின் கலக்கல்

ஆனால் இந்தப் போட்டியில் வழக்கம் போல தோனி கலக்கினார். ஒரு அருமையான கேட்ச்சை அவர் பிடித்த விதம் இருக்கே.. செம!.. அவர் வயதைக் காரணம் காட்டி பலர் கிண்டலடித்தாலும்.. அத்தனை பேருக்கும் இந்த சூப்பர் கேட்ச் மூலம் பொளேரென பதிலடி கொடுத்து விட்டார் தோனி. அத்தனை எளிதில் பிடிக்க முடியாத கேட்ச் அது. ஆனால் தோனி பிடித்த லாவகம் தோனி ரசிகர்களுக்கு "கூஸ்பம்ப்ஸ்" வர வைத்து விட்டது.

மோசமான ஸ்கோர்

மோசமான ஸ்கோர்

முதலில் பேட் செய்து ரொம்பக் கேவலமாக விளையாடி 125 ரன்கள் என்ற நிலையில் தங்களது இன்னிங்ஸை முடித்தாலும் கூட பீல்டிங்கின்போது ராஜஸ்தானை ஒரு கட்டத்தில் பவுலிங் மற்றும் பீல்டிங் மூலம் மிரட்டியது சென்னை என்பதில் சந்தேகமே இல்லை. குறிப்பாக பென் ஸ்டோக்ஸ், ராபின் உத்தப்பா ஆகியோரை வேகமாக அவுட் செய்து ரசிகர்களுக்கு நம்பிக்கையை ஊட்டினர்.

சஞ்சு விக்கெட்

சஞ்சு விக்கெட்

மறுபக்கம் சஞ்சு சாம்சன் என்ற அச்சுறுத்தல் இருந்து கொண்டிருந்தது. இவர் ஏற்கனவே முதல் சுற்றுப் போட்டியில் அரை சதம் போட்டு சென்னையை அதிர வைத்திருந்தவர். எனவே அவரைத் தூக்கினால் நல்லது என்ற இக்கட்டான நிலை. தீபக் சஹர்தான் அப்போது பந்து வீசிக் கொண்டிருந்தார். சஞ்சு சாம்சன் பந்தை எதிர்கொள்கிறார். நல்ல லென்த்தில் பந்தை வீசினார் சஹர். அதைத் தடுத்து அடிக்க முயன்றார் சஞ்சு சாம்சன். பந்தை சரியாக அடித்திருந்தால் அது பவுண்டரி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக விலகி போனது.

தோனி அடித்த டைவ்

தோனி அடித்த டைவ்

அந்த சமயத்தில்தான் தனது உடலை நன்றாக வளைத்து பந்தை நோக்கி டைவடித்து லாவகமாக கேட்ச் செய்தார் கேப்டன் தோனி. அதுவும் ஒரு கையால் அவர் பிடித்து அசத்தி விட்டார். யாராலும் அத்தனை சீக்கிரம் பிடிக்க முடியாத கேட்ச். இளம் வீரர்களால் மட்டுமே சாத்தியமாகக் கூடியது. ஆனால் தோனி பிடித்த விதம்.. வாவ் போட வைத்து விட்டது. வயசையாடா குத்திக் காட்டினீங்க என்று சொல்லாமல் சொன்னது தோனி அந்த கேட்ச்சைப் பிடித்த விதம்.. மேட்ச்சில் தோற்றாலும் இந்த ஒருகேட்ச் போதும் தோனியின் புகழ் பாட.

பிடிச்சும் பயனில்லையே

பிடிச்சும் பயனில்லையே

என்னதான் உயிரைக் கொடுத்து தோனி இந்த கேட்ச்சைப் பிடித்தாலும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும், ஜோஸ் பட்லரும் சேர்ந்து கப்பலை தங்கள் பக்கம் திருப்பிக் கொண்டு போய் விட்டனர். பழைய பெருமையோடு சோகத்துடன் பெவிலியன் திரும்பியது சென்னை சூப்பர் கிங்ஸ். இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் தோனி பிடித்த கேட்ச்சைத் திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்து ஆறுதல் அடைந்து வருகின்றனர்.

 
 
 
English summary
Chennai Super Kings captain Dhoni's catch against Rajasthan Royals goes viral in Social media.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X