அபுதாபி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியா மீது 50 அணுகுண்டுகளை வீசி அட்டாக் பண்ணலாம்... பாகிஸ்தானுக்கு ஐடியா சொல்லும் முஷாரப்

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியா மீது 50 அணுகுண்டுகளை வீசி அட்டாக் பண்ணலாம்- முஷாரப் அதிரடி- வீடியோ

    அபுதாபி:ஒரு அணுகுண்டை நாம் வீசினால் பதிலுக்கு 20 அணுகுண்டுகளை வீசி பாகிஸ்தானை இந்தியா அழித்து விடும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.

    ராணுவ கலகத்தின் மூலம் 1999ல் ஆட்சியை முஷாரப் பிடித்தார். பின்னர் 9 ஆண்டுகள் பாகிஸ்தானின் அதிபராகவும் அவர் இருந்தார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற கட்சியையும் அவர் நடத்தி வருகிறார்.

    உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக முஷாரப் தற்போது அபுதாபியில் வசித்து வருகிறார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

    அணு ஆயுத தாக்குதல்

    அணு ஆயுத தாக்குதல்

    இந்தியா,பாகிஸ்தான் நாடுகள் இடையேயான உறவானது மீண்டும் அபாய கட்டத்திற்கு சென்று விட்டது. வருங்காலத்தில் இரு நாடுகள் இடையே அணு ஆயுத தாக்குதல் நடைபெறாது.

    அணுகுண்டு வீசுவோம்

    அணுகுண்டு வீசுவோம்

    ஒருவேளை அது போன்ற சூழல் ஏற்பட்டால்.... இந்தியாவை ஒரு அணுகுண்டு வீசி தாக்கினால் அவர்கள் நம்மை 20 அணுகுண்டுகள் வீசி அழித்து விடுவார்கள். இந்தியாவை தாக்க ஒரேயொரு வழிதான் இருக்கிறது.

    அணுகுண்டுகள்

    அணுகுண்டுகள்

    நாம் ஒரே நேரத்தில் 50 அணுகுண்டுகளை அந்நாடு மீது வீச வேண்டும். அப்போது தான் அவர்களால் நம்மை 20 அணு ஆயுதங்கள் மூலம் தாக்க முடியாது.

    நாடு திரும்ப தயார்

    நாடு திரும்ப தயார்

    அப்படி பாகிஸ்தானால் ஒரே சமயத்தில் 50 அணு ஆயுதங்களை இந்தியாவை நோக்கி செலுத்த முடியுமா? பாகிஸ்தானில் அரசியல் சூழல் சாதகமாகும் போது நாடு திரும்ப தயார் என்றும் முஷாரப் பேசினார். புல்வாமா தீவிர தாக்குதலுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Former Pakistan President Pervez Musharraf has said that if Pakistan attacks a nuclear attack on neighboring India, then India can attack us by attacking 20 atomic bombs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X