அபுதாபி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆளே இல்ல.. விசில் சத்தம் பறக்குதே.. சியர் கேர்ள்ஸின் 'ரெக்கார்ட் டான்ஸ்' வேற.. அசத்தும் ஐபிஎல்!

Google Oneindia Tamil News

அபுதாபி: ஐபிஎல் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் சியர் கேர்ள்ஸ் நடனம் முதல் விசில், கைத்தட்டல் என சகலமும் ரெக்கார்ட் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஐபிஎல் போட்டிகள் இன்று தொடங்கியுள்ளன. முதல் போட்டியிலேயே பங்காளிகளான மும்பை இந்தியன்ஸும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பெரும்பாலான நாடுகள் பொது முடக்கத்தை அறிவித்து முடங்கி கிடந்தன.

 தமிழகத்தில் இன்று 5569 பேருக்கு கொரோனா.. 536477 பேர் இதுவரை பாதிப்பு.. குறையும் ஆக்டிவ் கேஸ்கள்! தமிழகத்தில் இன்று 5569 பேருக்கு கொரோனா.. 536477 பேர் இதுவரை பாதிப்பு.. குறையும் ஆக்டிவ் கேஸ்கள்!

ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்

ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்

இந்நிலையில் இந்த ஆண்டின் பெரிய விளையாட்டுத் திருவிழாவாக ஐபிஎல் போட்டிகள் தொடங்கியுள்ளன. இருந்த போதும் மிரட்டும் கொரோனாவால் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் பார்வையாளர்கள் இன்றி போட்டிகள் நடைபெறுகிறது

காதை கிழிக்கும் கைத்தட்டல்

காதை கிழிக்கும் கைத்தட்டல்

பார்வையாளர்கள் இன்றி ஸ்டேடியம் வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனாலும் சிக்ஸர், ஃபோர் என வீரர்கள் விளாசும் போது ஸ்டேடியத்தில் கைத்தட்டடலும் விசில் சவுண்டும் காதை கிழிக்கிறது.

பிரமாண்ட ஸ்பீக்கர்ஸ்

பிரமாண்ட ஸ்பீக்கர்ஸ்

வீரர்கள் களமிறங்கும் போதும், வீரர்கள் ரன்கள் விளாசும் போதும் அவர்களின் பெயர்களும் ஆடியன்ஸ் சார்பில் உச்சரிக்கப்படுகிறது. இவை அனைத்துமே பிரத்யேகமாக ரெக்கார்ட் செய்யப்பட்டு பிரமாண்ட ஸ்பீக்கர்கள் மூலம் ஸ்டேடியத்தின் பல மூலைகளில் இருந்தும் ஒலிக்க விடப்படுகிறது.

ரெக்கார்டு டான்ஸ்

ரெக்கார்டு டான்ஸ்

இதேபோல் விக்கெட் எடுத்தாலும் ரன்கள் விளாசினாலும் வீரர்களை ஸ்டேடியத்தின் ஒரு பகுதியில் தனி ஸ்டேஜில் நடனமாடி உற்சாகப்படுத்தும் சியர் கேர்ள்ஸும் இம்முறை பெரிய திரைகளில்தான் வந்து செல்கின்றனர். சியர் கேர்ள்ஸின் நடனம் ரெக்கார்ட் செய்யப்பட்டு ஒளிபரப்பட்டு வருகிறார்.

ஆர்ட்டிபிஷியலாக

ஆர்ட்டிபிஷியலாக

மொத்தமாக இந்த ஐபிஎல் சீசனில் பார்வையாளர்கள் இல்லாவிட்டாலும் அவர்கள் செய்யும் வேலைகள் எல்லாம் ஆர்ட்டிஃபிஷியலாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஆடியன்ஸ் சத்தம் முதல் அனைத்தும் தத்ரூபமாக இருப்பதால் உண்மையிலேயே ஆட்கள் இருக்கிறார்ளோ யோசிக்க வைத்துள்ளது இந்த ஐபிஎல்!

English summary
IPL 2020: Fake sounds are using in the Cricket stadium. Cheer girls also in recorded mode.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X