கரைந்தோடிய 36 வருடங்கள்.. அம்மாவைக் கண்டுபிடித்த மரியம்.. கூடவே கிடைத்த "போனஸ்".. டபுள் ஹேப்பி!
அபுதாபி: ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தாயை 36 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்துள்ளார். போனஸாக தனது தங்கையையும் கண்டு மகிழ்ந்தார்.
ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள ராஸ் கைமாஹ் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மரியம். இவர் சிறிய வயதாக இருந்த போதே அம்மாவும், அப்பாவும் 80-களிலேயே விவாகரத்து பெற்றுவிட்டனர்.
இதையடுத்து அப்பாவிடம் மரியத்தை விட்டுவிட்டு அம்மா இந்தியாவுக்கு சென்றுவிட்டார். அப்போது மரியத்தின் தாய் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
குடும்பத்தில் அடுத்தடுத்து 14 பேர் பலியான சோகம்.. மணப்பெண் வேடமிட்டு குடும்பத்தை காக்கும் நபர்!

தந்தை இறப்பு
அம்மா இல்லாத ஏக்கம் மரியத்துக்கு நிறையவே இருந்தது. இதனால் அம்மாவை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என எண்ணினார். ஆனால் அதற்குள் அவரது தந்தை இறந்துவிட்டார்.

விளம்பரம்
இதையடுத்து அம்மாவை தேடும் பணியில் தீவிரமாக இறங்கினார். இந்தியா போன்ற பெரிய நாட்டில் தாயை எப்படி கண்டுபிடிப்பது என யோசித்தார். அப்போது அவருக்கு ஒரு ஐடியா உதித்தது. பேசாமல் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துவிடலாம் என முடிவு செய்தார்.

யாரென்று தெரியும்
பின்னர் பத்திரிகைகளுக்கு விளம்பரமும் கொடுத்தார். அதில் எனது தாய் யாரென்று யாருக்கு தெரியும். எனக்கு தெரியப்படுத்துங்கள் என கேட்டிருந்தார்.

இரட்டிப்பு மகிழ்ச்சி
அதற்கான பலனும் கிடைத்தது. ஒரு வழியாக அம்மாவை கண்டுபிடித்தார். அத்தோடு இரட்டிப்பு மகிழ்ச்சியாக தனது இளைய சகோதரியையும் கண்டு ஆனந்த கண்ணீர் சிந்தினார். இந்தியாவில் எந்த பகுதியில் அவர் தனது தாயை கண்டுபிடித்தார் என்ற தகவல் ஏதும் கிடைக்கவில்லை.