அபுதாபி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பஹ்ரைனில் கடையில் விநாயகர் சிலையை உடைத்து வாக்குவாதம் செய்த பெண்.. ஷாக் வீடியோ

Google Oneindia Tamil News

அபுதாபி: பஹ்ரைனில் இருந்து ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இந்துக்களின் உணர்வுகளை கடுமையாக பாதித்துள்ளது.

Recommended Video

    பஹ்ரைனில் கடையில் விநாயகர் சிலையை உடைத்து வாக்குவாதம் செய்த பெண்

    வீடியோவில், இரண்டு புர்கா உடையணிந்த பெண்கள் கடைக்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும், கடையில் ஏன் இந்து கடவுள்கள் இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்புவதையும் பார்க்க முடிகிறது.

    அவர்களில் ஒருவர் விநாயகரின் சிலைகளை தூக்கிப்போட்டு உடைத்து செல்கிறார்கள், இவை அனைத்தும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

    வெறுப்பு பேச்சு.. இந்தியாவில் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படும் பேஸ்புக்.. வால் ஸ்டிரீட் ஜர்னல் கட்டுரை!வெறுப்பு பேச்சு.. இந்தியாவில் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படும் பேஸ்புக்.. வால் ஸ்டிரீட் ஜர்னல் கட்டுரை!

    நெட்டிசன்கள் கொதிப்பு

    நெட்டிசன்கள் கொதிப்பு

    இந்த வீடியோவை பார்த்து, நெட்டிசன்கள் கொதித்து எழுந்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதையடுத்து பஹ்ரைன் காவல்துறையினரும் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் 54 வயதுடைய அந்த பெண்ணின் மீது போலீசார் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது.

    சூப்பர் மார்க்கெட்

    சூப்பர் மார்க்கெட்

    விநாயகர் சதூர்த்தி திருவிழா நெருக்கி வருவதால், பல கடைகளில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாடப்படுகின்றன. இந்த சம்பவம் பஹ்ரைனின் தலைநகர் மனாமாவின் ஜுஃபைர் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடந்திருக்கிறது.

    தூக்கி போட்டார்

    தூக்கி போட்டார்

    வீடியோவில், விநாயகர் சிலை இருந்த அலமாரிக்கு அருகில் இரண்டு பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் கடை அதிகாரியுடன் வாக்குவாதம் செய்து சிலைகளை உடைக்கத் தொடங்குகிறார்கள். அந்த வீடியோ பதிவாகி உள்ளது. அவர்கள், மற்றொன்று சிலைகளை அலமாரியில் இருந்து தள்ளுகிறார்கள். இந்த காட்சியும் வீடியோவில் இருக்கிறது.. அந்த வீடியோ ட்விட்டரில் வெளியாகி வைரலானதையடுத்து. நெட்டிசன்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    5 வருடம் ஜெயில்

    5 வருடம் ஜெயில்

    இதனிடையே அபுதாபியில் மத சகிப்பின்மையுடன் நடந்து கொண்டால் 1 மில்லியன் டாலர் அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A video from Bahrain has been going viral on social media , two burqa-clad women are seen arguing with the shopkeeper and questioning why are there are Hindu gods in the store. They go on to break the Ganesha murtis all of which has been captured on video.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X