• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிக்ஸர் அடிக்கும் நாட்டு கோழி திட்டம் ; முதலீட்டாளர்களுக்கு பலே பலன்

விழுப்புரம்: வீட்டுக்கு வீடு கோழி, இதுவே எங்கள் வாழ்வாதாரத்தின் வழி என பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மகளிர் மேம்பாட்டிற்கான திட்டத்தை உருவாக்கியுள்ளது விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டுள்ள அக்ரோ டெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம்.

அட யார் இந்த அக்ரோடெக் நிறுவனம் ? என உங்கள் மனதில் எழும் கேள்வி புரிகிறது. இந்த நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள வறுமைகோட்டிற்கு கீழுள்ள விவசாயிகளுக்கு இரண்டு பெட்டை ஆடுகள் இலவசமாக வழங்கபடுகிறது. பொதுவாக பெட்டை ஆடுகள் குறைந்தபட்சம் இரண்டு குட்டிகள் ஈனுவது இயல்பு. இவற்றில் ஒன்றை அக்ரோடெக் நிறுவனத்திற்கும், மற்றொரு ஆட்டுகுட்டி வளர்க்கும் பயனாளிகளுக்கும் வழங்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்படும் இத்திட்டம் மூலம் ஒவ்வொரு பயனாளியும் 30 குட்டிகள் வரை இலவசமாக பெறுகின்றனர். அதேபோல் இந்நிறுவனம் இதன் மூலம் வளர்ச்சி அடைகிறது. இந்த திட்டமானது விழுப்புரத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று விழுப்புரம் நெல்லை, கன்னியாகுமரி, திண்டிவனம் கள்ளகுறிச்சி என தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. அத்தோடு இல்லாமல், புதுச்சேரியிலும் இத்திட்டம் கொடிகட்டி பறக்கிறது. இப்போது பெண்கள் புற வாசலில் நாட்டு கோழி வளர்க்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது அக்ரோடெக்.

Agrotech company Chicken farming will give sustainable income in villages

வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டுமென்றால், அவர்களது பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் அக்ரோ டெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு உருவாகியுள்ளது.

அதுதொடர்பாக அந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், பல்வேறு காரணிகள் தெரியவந்துள்ளது. அதில் ஒன்றுதான், வீட்டில் இருந்தே கிராம பெண்கள் சம்பாதிக்க வழி வகுப்பதாகும். அதேநேரத்தில் அந்த தொழில் அவர்களுக்கு தெரிந்த தொழிலாக இருக்க வேண்டும். இல்லையெனில் தீட்டப்படும் திட்டங்களின் பலன் மக்களை முழுமையாக சென்றடையாது என்பதும் அந்நிறுவனத்தின் முக்கிய கருவாக இருந்தது. அப்படி உருவானதுதான், கிராமபுற ஏழை பெண்களுக்கு வீட்டுக்கு வீடு நூறு தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழிகளை இலவசமாக கொடுக்கும் திட்டமாகும்.

Agrotech company Chicken farming will give sustainable income in villages

ஒரு மாத கோழிக்குஞ்சுகளாக இவர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும். அதுமட்டுமின்றி அக்கோழி குஞ்சுகள். தேவையான மருத்துவ வசதிகளும் கட்டணமின்றி கொடுக்கப்படுமாம். இதனால் பயனாளிகள் மனதில் பட்டாம் பூச்சிகள் சிறகடித்து பறக்கின்றன. இந்த நாட்டுகோழிகளை பொறுத்தவரை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு வேளாண் பல்கலைகழக அறிஞர்கள் உருவாக்கிய உயர் ரக நாட்டு கோழிகுஞ்சுகளான அசில், கிரி ராஜா, வனராஜா, கிராம்பிரியா, கைராளி உள்ளிட்டவை ஆகும். இவை நம் நாட்டில் பல்வேறு வகையான நாட்டுக்கோழிகளின் ஜீன்களை வேளாண் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இவைகள் ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக 160 முட்டைகள் வரை ஈடும். அதுமட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுடையவை என்பதால் எல்லாவிதமான சீதோஷ்ன நிலைகளையும் தாங்கும் என புவனேஸ்வரத்தை சேர்ந்த அறிவியல் அறிஞர் பண்டிட் குமார் மாலிக் தெரிவிக்கிறார்.

Agrotech company Chicken farming will give sustainable income in villages

இவைகள் சராசரியாக 45 நாட்களில் ஒன்றரை கிலோ எடையும், 4 மாதங்களில் 2 கிலோவிற்கு மேல் இருக்கும். முட்டைகளை பொறுத்தவரை சராசரி கோழிகளை விட 40 சதவீதம் அதிகளவில் முட்டைகள் இடுகின்றன. இவற்றை வளர்க்கும் பெண்களிடம் மொத்த விலைக்கு வாங்கி, சில்லறை விலைக்கு விற்பதால் முதலீட்டார்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டார்களுக்கு மிகப்பெரிய லாபம் குறுகிய காலத்தில் கிடைக்கிறது.

கோழிகளை இலவசமாக கொடுக்கும் அதேநேரத்தில் கோழிகளை வளர்க்கும் கூண்டுகளை அமைக்க தேவையான நிதி ஆதாரத்தில் 80 சதவீதம் அக்ரோடெக் நிறுவனத்தால் மானிய கடனாக கொடுக்கப்படுகிறது.
நம் நாட்டில் மனிதர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டுமென்றால், ஆண்டு ஒன்றிற்கு தனி மனிதன் ஒருவனுக்கு சராசரியாக 180 முட்டைகள் தேவைப்படுகின்றன. இவைகள் மூலம் ஊட்டச்சத்து தேவை பூர்த்தி செய்யப்படும். ஆனால் இன்றைய சூழலில் சராசரியாக தனி மனிதன் ஒருவருக்கு 69 முட்டைகளே கிடைக்கின்றன. எனவே இதுபோன்ற திட்டங்கள் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள பெண்களின் வருமானம் உயர்வது மட்டுமின்றி, முதலீட்டார்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் எவ்வித ஐய்யமும் கொள்ளத்தேவையில்லை.

Agrotech company Chicken farming will give sustainable income in villages

குறைந்த பட்சம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்யுங்கள். இதன் மூலம் மாதம் 3% வருமானத்தை 36 மாதங்களுக்கு தவறாமல் பெற்றிடுங்கள் மற்றும் தங்கள் முதலீட்டு தொகையையும் 36 மாதங்கள் பின்பு முழுமையாக பெற்றிடுங்கள்.

இந்த நிறுவனத்தில் முதலீட்டாளராக இணைய விரும்புபவர்கள்
+91 70101 44851 மற்றும் +91 98842 99871 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Email id - info@agrotechfpc.org

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X