அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வைப் பத்தி மட்டும் நீங்க பேசாதீங்க ப. சிதம்பரம்.. அனிதாவின் சகோதரர் அதிரடி

Google Oneindia Tamil News

அரியலூர்: நீட் தேர்வை பத்தி மட்டும் நீங்கள் பேசாதீங்க என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை அரியலூர் அனிதாவின் சகோதரர் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வினால் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போனதற்காக அரியலூர் அனிதா தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இவரை போல் இன்னும் சில மாணவர்களும் நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இதனால் தமிழகத்தின் முக்கிய பிரச்சினையாக நீட் இருந்து வருகிறது. மேலும் இதையே தேர்தல் அறிக்கையாகவும் அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகியவை வைத்துள்ளன. இந்த நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக, நீட் தேர்வை ஒரு போதும் ரத்து செய்யமாட்டோம் என்று கூறிவிட்டது.

யாருக்கு வாக்களிக்கக் கூடாதுனு நாங்கள் முடிவு செய்துட்டோம்.. கமலுக்கு அனிதா அண்ணன் பதில் யாருக்கு வாக்களிக்கக் கூடாதுனு நாங்கள் முடிவு செய்துட்டோம்.. கமலுக்கு அனிதா அண்ணன் பதில்

எளிது

எளிது

ஆனால் அதே வேளையில் திமுக- காங்கிரஸ் கூட்டணி நீட் தேர்வை ரத்து செய்வோம் என தெரிவித்துவிட்டது. இதுகுறித்து ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் பக்கத்தில் கூறுகையில் நீட் தேர்வு பற்றி இரண்டு அணிகளின் நிலைப்பாடுகள் தெளிவாகத் தெரிந்துவிட்டன. யாருக்கு வாக்களிப்பது என்று மாணவர்கள், பெற்றோர்கள் முடிவு எடுப்பது எளிதாகிவிட்டது.

பதிலடி

பதிலடி

காங்கிரஸ் அரசு அமைந்தால் 'நீட்' தேர்வு கிடையாது. பாஜக அரசு அமைந்தால் 'நீட்' தேர்வு தொடர்ந்து இருக்கும். இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18 என்று தெரிவித்துள்ளார். இதற்கு அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் பதிலடி கொடுத்துள்ளார்.

வாக்கு

வாக்கு

அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் நீட் தேர்வு குறித்த அரசியல் கட்சிகளின் முடிவு தெளிவாக தெரிந்துவிட்டதால்,பெற்றோரும் மாணவரும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தெளிவு பெற்றுவிட்டனர்..-ப.சிதம்பரம்

அப்படியே உங்க மனைவி #நளினி_சிதம்பரத்திற்கு தெளிவுபடுத்தி விடுங்க அய்யா... நீட் வேணும்னு கோர்ட்டுக்கு கட்டு தூக்கிட்டு போய்ட போறாங்க... நீட் தேர்வைப் பத்தி மட்டும் நீங்க பேசாதீங்க சிதம்பரம்... என்று குறிப்பிட்டுள்ளார்.

நளினி சிதம்பரம்

நளினி சிதம்பரம்

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதையடுத்து 12-ஆம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து நீட் தேர்வர்கள் சார்பில் உச்சநீதிமன்றம் சென்று அனிதாவுக்கு எதிரான தீர்ப்பை வாங்கித் தந்தவர் நளினி சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Anitha's brother criticises P.Chidambaram's tweet about Neet as his wife Nalini Chibambaram files case on behalf of Neet exam students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X