அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யாருக்கு வாக்களிக்கக் கூடாதுனு நாங்கள் முடிவு செய்துட்டோம்.. கமலுக்கு அனிதா அண்ணன் பதில்

Google Oneindia Tamil News

Recommended Video

    எச்.ராஜாவை பார்த்ததும் டீவியை டார்ச்சால் உடைத்த கமல்.. வைரல் வீடியோ!

    அரியலூர்: யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்று நாங்கள் முடிவு செய்துவிட்டோம் என அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் கமலுக்கு பதில் அளித்துள்ளார்.

    கமல் நேற்று வெளியிட்டுள்ள ஆவேச வீடியோவில் டார்ச் லைட்டுடன் கமல் டிவி பார்ப்பார். அப்போது ஸ்டாலின், மோடி, எச் ராஜா ஆகியோரின் பரப்புரை இருக்கும். அப்போது கோபத்துடன் டார்ச் லைட்டை தூக்கி எறிந்து டிவியை உடைப்பார்.

    அப்போது கோபமாக மக்களிடம் கேட்பார். யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என வரிசையாக பேசிவிட்டு இவர்களுக்கா? என்பார், நீ என்னய்யா சொல்வது நாங்கள் பெற்றோர் சொல்வதைக்கேட்டு வாக்களிப்போம் என்று சொல்கிறீர்களா? எனக் கேட்கும் கமல் அதுவும் சரிதான் பெற்றோரைக் கேட்டு வாக்களியுங்கள் எந்த பெற்றோரைத் தெரியுமா?

    தள்ளுப்பா நான் அயர்ன் பண்றேன்.. ஓட்டு போட்ரணும்..இல்லாட்டி துணியில் ஓட்டை போட்ருவேன்.. மன்சூர் நச் தள்ளுப்பா நான் அயர்ன் பண்றேன்.. ஓட்டு போட்ரணும்..இல்லாட்டி துணியில் ஓட்டை போட்ருவேன்.. மன்சூர் நச்

    யாருக்கு

    யாருக்கு

    நீட் தேர்வால் தேர்ச்சியடைய முடியாமல் உயிரை மாய்த்துக் கொண்டாரே அனிதா, அவரது பெற்றோரைக்கேளுங்கள் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்று சொல்வார்கள் என முடித்திருப்பார் கமல். இதற்கு அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் பதில் அளித்துள்ளார்.

    18 தொகுதி இடைத்தேர்தல்.. யார் யாருக்கு இடையில் போட்டி.. மாஸ் லிஸ்ட் இதோ!

    உண்மையான ரசிகன்

    உண்மையான ரசிகன்

    இது குறித்து அரியலூர் அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அண்ணன் #கமல் அவர்களின் உண்மையான ரசிகன் நான்...

    நற்பணி மன்றங்கள்

    நற்பணி மன்றங்கள்

    நடிப்பிற்காக மட்டுமல்ல, திரையிலும் நிஜத்திலும் மரபுகளை உடைக்க நினைக்கும் கலைஞன், மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன தனக்கு சரியென்று படுவதை செய்யும் துணிச்சல்காரன்..
    ரசிகர் மன்றங்களை கலைத்து நற்பணி மன்றங்களாக மடைமாற்றம் செய்தவன்...

    வாழ்த்துகள்

    வாழ்த்துகள்

    அவரைப் பார்த்துதான் 18 முறை இரத்ததானம் செய்துள்ளேன்.. உடல்தானம் செய்துள்ளேன்.. புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் மகிழ்ச்சிதான், அந்த வகையில் அண்ணன் கமல் அவர்களுக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கும் என் வாழ்த்துகள்...

    திருமாவளவனுக்கு எங்கள் வாக்கு

    திருமாவளவனுக்கு எங்கள் வாக்கு

    அண்ணன் #கமல் சொன்னது போல யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் #நானும், எங்கள் குடும்பமும் தெளிவாகவே இருக்கிறோம். #பாசிச_பாஜக கூட்டணிக்கு ஒருபோதும் வாக்களிக்க கூடாது,என்பதில்......
    அனிதா இறந்த போது "திருமாவளவன்" இதை சும்மா விடக்கூடாது தாங்கள் கூறிய அதே #திருமாதான் எங்கள் தொகுதியின் வேட்பாளர்.

    திமுக

    திமுக

    மத்திய அரசிடம் நீட் விலக்கு என்பதை நிர்பந்திக்கும் வல்லமை கொண்ட கட்சி, சமூக நீதி நிலைநாட்டும் கட்சி, மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத கட்சி, தற்போதைய சூழலில் தமிழகத்தின் குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரே கட்சி திமுக மட்டுமே.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வலியுறுத்தலின் காரணமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது.
    ஆதலால் எங்களின் வாக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் #தலைவர்_திருமா (தலைவர் என்ற பதத்திற்கு முழு தகுதியுடையவர்) அவர்களுக்கே...

    என்றும் #கமல்_ரசிகன்

    English summary
    Ariyalur Anitha's brother Manirathinam says that he and his family decides to vote to whom. He will cast his vote to Thirumavalavan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X