அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பயமா இருக்குடி.. யாராவது வர போறாங்க" தோட்டத்தில் பீர் குடித்த 5 பிளஸ் டூ மாணவிகள் மீது நடவடிக்கை!

மாணவிகள் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    காட்டு பகுதியில் 3 மாணவிகள்.. ஸ்கூல் பிள்ளைங்க.. கையில் பீர் பாட்டில்.. சியர்ஸ் வேறு.. ஷாக் வீடியோ!

    அரியலூர்: தோட்டத்தில் 3 மாணவிகள்.. அதுவும் ஸ்கூல் யூனிபார்மில்... அவர்கள் கையில் பீர்பாட்டில்.. பக்கத்தில் ஸ்நாக்ஸ்... சியர்ஸ் சொல்லி எல்லோருமே தண்ணி அடிக்கிறார்கள்.. இப்படி ஒரு வீடியோ வைரலாகி தமிழக மக்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த 5 மாணவிகள் மீதும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    2 நாளைக்கு முன்பு ஒரு வீடியோ வெளியானது.. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த மாணவிகள் இவர்கள். மொத்தம் 5 பேர்.

    ஐவருமே மாணவிகள்.. ஸ்கூல் யூனிபார்மில் உள்ளனர்.. 2 பேர் வீடியோ எடுக்க மற்ற 3 பெண்களும் தண்ணி அடிக்கிறார்கள். சுற்றி யாரும் இல்லை.. கலகலவென பேசிகொண்டும், விபரீதத்தையும், விளைவையும் அறியாமலும் அரட்டை அடித்து கொண்டு பேசுகிறார்கள்.

    தோட்டம்

    தோட்டம்

    அந்த வீடியோவில், அது ஒரு தோட்ட பகுதி போல உள்ளது.. பீர் பாட்டிலுடன் ஸ்நாக்ஸ், டம்ளர் உள்ளிட்டவைகளும் தயாராக கொண்டு வந்துள்ளனர்... பாட்டிலை திறந்து 3 பேருமே டம்பளரில் ஊற்றி குடிக்கிறார்கள்.. "பயமா இருக்குடி.. யாராவது வந்துட போறாங்க..".. என்னடி இப்படி குடிக்கிறீங்க?", பாட்டிலை தூக்கி போடுங்கடி... எங்க புள்ளைங்க எல்லாம் வேற லெவலு" இப்படி அந்த வீடியோவில் பேச்சுக்கள் பதிந்துள்ளன.

    பள்ளி நிர்வாகம்

    பள்ளி நிர்வாகம்

    இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி கடுமையான அதிர்ச்சியை தந்தது.. இந்த மாணவிகள் படிப்பது அரியலூரில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளி... இந்த வீடியோ வைரலானதால் கல்வி துறை வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பள்ளி நிர்வாகம் உடனடியாக விசாரணையில் இறங்கியது. பின்னர், சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து பள்ளி நிர்வாகத்தினர் பேசினர்.

    பிளஸ் டூ தேர்வு

    பிளஸ் டூ தேர்வு

    அந்த மாணவிகளுக்கு தொடர்ந்து பள்ளிக்கு வர தடை விதிக்கப்பட்டது... மேலும் அவர்களை பள்ளியைவிட்டு நீக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் பிளஸ்-2 மாணவர்கள்... மார்ச் மாதம் இவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது... இதனால் மாணவிகளின் நலன் கருதி தேர்வு எழுத மட்டும் அனுமதிக்கலாம் என்கிறார்கள்.. பீர் குடிப்பதை விளையாட்டாக வீடியோ எடுத்து, அதை பதிவிட போய்.. இப்போது வருங்காலமே கேள்விக்குறியாகி விட்டது!

    கண்டிப்பு

    கண்டிப்பு

    இதற்கெல்லாம், பெற்றோர்களின் சரியான கவனிப்பு இல்லை என்று சொல்வதா? அறியாமை என்று சொல்வதா? என தெரியவில்லை.. பிள்ளைகளிடம் போதிய கண்காணிப்பும், அரவணைப்பும் காட்டாததே முக்கிய காரணமாக இருக்கிறது.. அத்துடன் ஆசிரியர்களின் கண்டிப்பும் இன்றைய மாணவர்களுக்கு கட்டாயம் தேவைப்படுகிறது!

    English summary
    school admin takes action against 5 girls for their drunken video near ariyalur
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X