அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மே 6ல் நடந்த திருப்பம்.. சென்னையை விட கவலையளிக்கும் அரியலூர்.. கொரோனா பரவலின் புதிய எபிசென்டர்!

Google Oneindia Tamil News

அரியலூர்: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கொரோனா காரணமாக அதிகமாக பாதிக்கப்படும் மாவட்டமாக அரியலூர் மாறியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9,227 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று ஒரே நாளில் 380 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது.

சென்னைக்கு அருகே இருக்கும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா அதிகம் ஏற்படுவது கொஞ்சம் ஏற்றுக்கொள்ள கூடியது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் அரியலூர் மாவட்டத்திலும் தற்போது கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

அச்சமூட்டும் டாஸ்மாக் கிளஸ்டர்.. குடிமகன்கள் மூலம் தமிழகத்தில் கொரோனா பரவியதா? உண்மை பின்னணி என்ன? அச்சமூட்டும் டாஸ்மாக் கிளஸ்டர்.. குடிமகன்கள் மூலம் தமிழகத்தில் கொரோனா பரவியதா? உண்மை பின்னணி என்ன?

தொடக்கத்தில் நன்றாக இருந்தது

தொடக்கத்தில் நன்றாக இருந்தது

சரியாக சொல்ல வேண்டும் என்றால் அரியலூர் மாவட்டத்தில் எல்லாம் நல்ல நிலையில்தான் இருந்தது. அங்கு மே 1ம் தேதி திடீர் என்று கொரோனா வேகம் எடுத்தது. அங்கு அன்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. நமங்குணம் என்று கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் லாரியில் கோயம்பேட்டில் இருந்து அரியலூரில் உள்ள தனது கிராமத்திற்கு வந்தார். அவரை போல அங்கு பலர் அடுத்தடுத்து வந்தனர் . இதன் மூலம் தினமும் 10, 20 என்று கேஸ்கள் வந்தது.

கோயம்பேடு காரணம்

கோயம்பேடு காரணம்

அதன்பின் கோயம்பேட்டில் இருந்து அரியலூர் சென்ற 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கடந்த மே 4ம் தேதி ஒரே நாளில் 20 கேஸ்கள் வந்தது. இதனால் கோயம்பட்டில் இருந்து சரக்கு வாகனங்கள் மூலம் அரியலூர் சென்ற தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் முடிவு செய்யப்பட்டது. கோயம்பேட்டில் இருந்து அரியலூர் சென்ற 700க்கும் மேற்பட்டோர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தீவிரமாக சோதனைகள் செய்யப்பட்டது.

பலருக்கு பரவியது

பலருக்கு பரவியது

ஆனால் இவர்கள் தனிமைப்படுத்தப்படும் முன் பலருக்கு அவர்கள் மூலம் கொரோனா பரவியது. முக்கியமாக ஒரே குடும்பத்தில் பலருக்கு கொரோனா பரவியது. இதில் ஒரே நல்ல விஷயம், இப்படி கொரோனா பரவிய நபர்கள் எல்லாம் ஏற்கனவே கொரோனா வந்தவர்களின் நேரடி உறவினர்கள். அதாவது ஸ்டேஜ் 2 பரவல் மட்டுமே ஏற்பட்டுள்ளது. அங்கு ஸ்டேஜ் 3 பரவல் ஏற்படவில்லை. அதற்கு முன்பே அங்கு கொரோனா பாதிக்கப்பட்ட ''கோயம்பேடு ரிட்டர்ன்ஸ்'' எல்லோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அந்த ஒரு நாள்

அந்த ஒரு நாள்

அதன்பின் அரியலூரில் கடந்த மே 6ம் தேதிதான முக்கியமான திருப்பம் ஏற்பட்டது. அங்கு அன்று ஒரே நாளில் மொத்தம் 188 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. மே 5ம் தேதி வரை அரியலூரில் 34 பேருக்கு மட்டுமே கொரோனா இருந்தது. இதனால் அரியலூர் கொரோனாவில் இருந்து தப்பிக்கும் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்தவர்களில் மேலும் 188 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. மே 6ம் தேதி மொத்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்தது.

இன்னும் பலர் இருக்கிறார்கள்

இன்னும் பலர் இருக்கிறார்கள்

தற்போது அங்கு தினமும் 20-30 கேஸ்கள் வந்த வண்ணம் இருக்கிறது. நேற்று 13 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டது. மொத்தம் 335 பேருக்கு அங்கு கொரோனா உள்ளது. அதேபோல் அரியலூரில் கோயம்பேட்டில் இருந்து வந்த 850 பேர் தனிமைப்படுத்தப்பட்டள்ளனர். இவர்களில் இன்னும் சிலருக்கு கொரோனா சோதனைகள் செய்ய வேண்டும். அதேபோல் உறவினர்கள் சிலருக்கும் கொரோனா சோதனை செய்ய வேண்டும். இதன் முடிவில் கேஸ்கள் இன்னும் அதிகரிக்கும்.

வேறு காரணம்

வேறு காரணம்

அதேபோல் அரியலூருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவ பயிற்சி குழு ஒன்று ஹைதராபாதத்தில் இருந்து வந்துள்ளது. ஹைதராபாத்தில் பயிற்சி எடுத்த மூன்று ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் ஒரு பெண் மருத்துவ பணியாளர் நான்கு பேரும் அரியலூர் வந்துள்ளனர். இவர்கள் நான்கு பேர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 22 பேர் என்று மொத்தம் 26 பேருக்கு இவர்களால் கொரோனா ஏற்பட்டுள்ளது. இவர்கள் பழகிய இன்னும் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரியலூரில் கேஸ்கள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம் ஆகும்.

அரியலூரில் குணமடைகிறார்கள்

அரியலூரில் குணமடைகிறார்கள்

இதனால் சென்னைக்கு இணையாக அரியலூரில் கேஸ்கள் அதிகரிக்கிறது. அரியலூரில் இப்படி கேஸ்கள் அதிகரிப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதெல்லாம் மாவட்ட நிர்வாகம் கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அங்கு சராசரியாக தினமும் 20-30 குணப்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் எல்லோரும் வேகமாக டிஸ்சார்ஜ் ஆவது மட்டுமே ஒரே நல்ல விஷயமாக உள்ளது.

English summary
Coronavirus: Ariyalur becomes new epicenter after May 6 due to Koyembedu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X