அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரண கொரோனாவிலும் கிளுகிளுப்பா.. கொரோனா வார்டிலிருந்து பெண் டிக்டாக்.. ரசித்த 3 ஊழியர்கள் டிஸ்மிஸ்!

கொரோனா பாதித்த பெண் டிக்டாக் செய்ததால் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்

Google Oneindia Tamil News

அரியலூர்: ஆஸ்பத்திரி பெட்டில் படுத்துக்கொண்டே டிக்டாக் வீடியோக்களை செய்தார் இளம்பெண்.. கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில்.. சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த டிக்டாக் செய்துள்ளார்.. அந்த வீடியோக்களை செல்போனில் வாங்கி ஆர்வமுடன் பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் 3 பேர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.. இந்த சம்பவம் அரியலூரில் அதிர்ச்சியை உண்டுபண்ணி உள்ளது!

Recommended Video

    கொரோனா வார்டிலிருந்து பெண் டிக்டாக்.. ரசித்த 3 ஊழியர்கள் டிஸ்மிஸ்! - வீடியோ

    அரியலூரை சேர்ந்த 25 வயது பெண் அவர்.. கடுமையான காய்ச்சல், சளி அறிகுறியால் கடந்த 20-ம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு உடனடியாக டெஸ்ட் செய்து பார்த்ததில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.. அதனால் அப்பெண்ணை கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணித்தபடியே இருந்தனர். இந்த பெண்ணுக்கு தொற்று என்பதால் இவரது உறவினர்கள் 16 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

    சிகிச்சை

    சிகிச்சை

    ஆனால் அவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதால் விடுவிக்கவும் பட்டனர். அதனால் கொரோனா பாதித்த இளம்பெண் மட்டும் சிகிச்சையில் உள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணோ, சும்மா இல்லாமல் செல்போனில் டிக்டாக் செய்து வீடியோ எடுத்தார்.. அந்த வீடியோவை ஆஸ்பத்திரியில் உள்ள நர்ஸ்களிடம் ஓடி ஓடி சென்று காட்டி கொண்டிருந்தார்.. இவர்களை தவிர , ஒப்பந்த தூய்மை பணியாளர்களிடமும் அந்த வீடியோவை செல்போனில் காட்டி உள்ளார்.

    தூய்மை பணியாளர்கள்

    தூய்மை பணியாளர்கள்

    இப்படி 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் கொரோனா பாதிக்கப்பட்டவரின் செல்போனை வாங்கி பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3 பேரையும் அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்துவிட்டனர்.. அதுமட்டுமல்ல, கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை வாங்கி பயன்படுத்தியதால் அந்த 3 பேரையும் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தி உள்ளனர்.

    சோகமான வீடியோ

    சோகமான வீடியோ

    கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதால் அதை பற்றின சோக கீதத்தைதான் டிக்டாக் வீடியோவாக அந்த பெண் பதிவிட்டிருந்தார்.. "கொரோனா வைரஸ் வந்துச்சு நம்ம கிட்டதான்.. அது வந்துச்சுன்னா நம்ம எல்லாம் மட்டைதான்" கதறவிட்டாங்கோ, பதறவிட்டாங்கோ, பரவ விட்டாங்கோ.. வைரஸை பரப்பி விட்டாங்கோ.." "இப்படியே வாழந்தாக்கா புழு மட்டும் வாழும்டா, பூச்சி மட்டும் வாழுடா.. மனுஷ பய இடம் மட்டும் மண்ணாகி போகுமடா" என்று பெட்-டில் படுத்து கொண்டே டிக்டாக் வீடியோக்களை செய்துள்ளார் இந்த பெண்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இவை எல்லாதே ஒரே சோக மயம்..அனைத்து டிக்டாக் வீடியோக்களும் செல்போனில் இருந்து டெலிட் செய்யப்பட்டன. ஆஸ்பத்திரிக்குள்ளேயே இளம்பெண் டிக்டாக் வீடியோ செய்ததும், அந்த பெண்ணை தனிமைப்படுத்தி கண்காணிக்க நியமிக்கப்பட்ட பணியாளர்களே இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதும் மருத்துவமனை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    English summary
    coronavirus: ariyalur corona girl tik tok in hospital and three suspended
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X